காலை உணலுக்கு ருசியான சேலம் அலா புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

பாரம்பரிய உணவுகளின் ருசியே தனிதான். உடம்புக்கும் அவ்வளவு சத்தும் கூட. இதனாலே நம் முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறையை வழிவழியாக கடத்தி வந்துள்ளனர். அதில் அலா புட்டும் ஒன்று. அல்வாபுட்டு என்ற பெயரும் உண்டு. இனிப்பு சுவையான இந்த உணவை சேலத்தில் வீதி தவறாது செய்து சாப்பிடுகின்றனர். வழுவ

By ·

பாரம்பரிய உணவுகளின் ருசியே தனிதான். உடம்புக்கும் அவ்வளவு சத்தும் கூட. இதனாலே நம் முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறையை வழிவழியாக கடத்தி வந்துள்ளனர். அதில் அலா புட்டும் ஒன்று. அல்வாபுட்டு என்ற பெயரும் உண்டு. இனிப்பு சுவையான இந்த உணவை சேலத்தில் வீதி தவறாது செய்து சாப்பிடுகின்றனர். வழுவழுப்பான தோற்றத்துடன் குறைந்த விலையில் பலரது பசியாற்றும் ஆரோக்கியத் தின்பண்டம்தான் அல்வா புட்டு!

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?

சேலத்தில் இருக்கும் எந்தப் பலகாரக் கடைக்குச் சென்றாலும், அல்வா புட்டைத் தரிசிக்கலாம். குறிப்பாக வீட்டிலேயே செய்யப்படும் பலகாரங்களில் அல்வா புட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகைக் காலச் சிற்றுண்டிகளில் அல்வா புட்டு தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது. கண்ணாடி பதித்த தள்ளு வண்டிக் கடைகளிலும் மாலை நேரத்தில் அல்வா புட்டு விற்பனை களை கட்டுகிறது. இந்த பதிவில் சுவையான அலா புட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை