மாலை நேரங்களில் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சாமை பணியாரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை - தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டிதான் குழி பணியாரம

By ·

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை – தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டிதான் குழி பணியாரம். டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள்.

சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் சாமை. இந்த சாமையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். சாமையில் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன. சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.

இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான சாமையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள். காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் இந்த சாமை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனையும்‌ படியுங்கள் : பீட்ரூட்டில் சூப்பரான ஸ்வீட் பணியாரம் வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம்! இதனுடைய சுவை கேக்கை விட சூப்பரா இருக்கும்!

Recipes AMP · Quick view
View full