மாலை நேரங்களில் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சாமை பணியாரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை – தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டிதான் குழி பணியாரம். டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள்.

-விளம்பரம்-

சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் சாமை. இந்த சாமையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். சாமையில் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன. சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.

- Advertisement -

இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான சாமையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள். காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் இந்த சாமை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Print
4.50 from 2 votes

சாமை பணியாரம் | Samai Paniyaram Recipe In Tamil

இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான சாமையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள். இந்த சாமையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். சாமையில் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன. காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் இந்த சாமை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time20 minutes
Active Time10 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: Samai Paniyaram
Yield: 4 People
Calories: 378kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குழி பணியார கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாமை அரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • 1/4 கப் உளுந்து
  • 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 2 கப் வெல்லம்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டீஸ்பூன் சுக்கு பொடி
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சாமை அரிசியில் கல் நீக்கி நன்கு கழுவி, அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • இவை ஊறியதும் ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து நன்கு சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு பாகாக இல்லாமல் கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
  • பின்னர் இதை வடிகட்டி மாவுடன் சேர்த்து கலக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி, சுக்கு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அதன்பிறகு பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பணியார மாவை ஊற்றவும்.
  • பின் ஒரு கம்பியால் அதனை திருப்பிப் போட்டு, மீண்டும் 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தித்திக்கும் சாமை பணியாரம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 378kcal | Carbohydrates: 7.9g | Protein: 11g | Fat: 3.2g | Saturated Fat: 1.7g | Sodium: 7.2mg | Potassium: 195mg | Fiber: 8.5g | Vitamin C: 3.75mg | Calcium: 16mg | Iron: 3mg

இதனையும்‌ படியுங்கள் : பீட்ரூட்டில் சூப்பரான ஸ்வீட் பணியாரம் வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம்! இதனுடைய சுவை கேக்கை விட சூப்பரா இருக்கும்!