காலை டிபனுக்கு ருசியான சாமை வெண்பொங்கல் இப்படி ஒரு தடவை செய்து கொடுங்ஙள் விரும்பி சாப்பிடுவார்கள்!
தமிழர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, தித்திப்பான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, வண்ண வண்ண கோலங்கள் ஆகியவை தான். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை
தமிழர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, தித்திப்பான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, வண்ண வண்ண கோலங்கள் ஆகியவை தான். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம். இந்த முறை வெண்பொங்கலை பச்சரிசியில் செய்யாமல் கொஞ்சம் மாற்றாக சிறுதானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் செய்து பொங்கலை கொண்டாடுவோம். சிறுதானிய வகையில் செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்கும். இயற்கையான உணவு பொருட்களே நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அதிலும், குறிப்பாக சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளன. மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில்தான் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கலோரி அளவு மிகக்குறைவு. அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம் உள்ளன. உடலில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் சாமையை, தினமும் காலை உணவாகச் சமைத்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன. இன்று சாமை அரிசியில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில சிறிது கேழ்வரகு மாவு இருந்தால் இப்படி ருசியான களி செஞ்சி பாருங்க!