நமது பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு என்னவென்றால் அது கேப்பகளி. தினமும் காலையில் நமது முன்னோர்கள் இந்த உணவை காலை உணவாக உண்டு வந்தனர். எனவேதான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் 50 வயதில் செய்த வேலையை கூட இப்போதுள்ள தலைமுறையினரால் 20 வயதில் கூட செய்ய முடிவதில்லை. அந்த அளவிற்கு இது போன்ற உணவுகள் அவர்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருந்தது.
இன்றைய தலைமுறையினரரோ உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் பல உணவை உண்கின்றனர் . எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள். இப்பொழுது இருப்பவர்கள் மிகவும் சுலபமாக செய்யும் வகையில் இந்த கேழ்வரகு களியை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது கேழ்வரகு சேர்த்த உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். . இதை கேழ்வரகு களி, கேப்பைக்களி எந்த பெயரில் வேண்டும் என்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவி அசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். அருமையான கேழ்வரகு களி செய்முறை இதோ.
கேழ்வரகு களி | Ragi Kali Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கேழ்வரகு மாவு
- உப்பு தேவைக்கு
- 3 டீஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டீஸ்பூன் உளுந்து
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- 3 காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை தேவைக்கு
செய்முறை
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து விட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்
- ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டி கொண்டே விடாமல், கட்டித் தட்டாத வாறு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
- மாவு கட்டித் தட்டாமல் இருக்க whisk ஐப் பயன்படுத்தலாம்
- எல்லா மாவையும் கொட்டிய பிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும் வரை விடாமல் கிண்டி விட வேண்டும்.
- நன்றாக வெந்துவாசனை இறக்கிவிட வேண்டும் வந்ததும்
- இதற்கு தேங்காய் சட்னி,மீன் குழம்பு,கருவாட்டுக் குழம்பு போன்றவை பொருத்தமாக இருக்கும்