காலை உணவுக்கு இனி சம்பா கோதுமை ரவா அடை இப்படி செய்து பாருங்க! 1 அடையை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில் இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்து விடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும்

By Prem Kumar · 3/8/2023

வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில் இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்து விடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும். அருமையாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டுவிடுவார்கள். அரிசி சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ரெசிபி என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவு என்று அனைவரும் தேடித்தேடி சில உணவு வகைகளை சமைத்து வருகின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக சத்து நிறைந்த சம்பா கோதுமை ரவா உணவு சாப்பிட்டு வந்துள்ளனர். சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.  சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் இது போன்ற தானிய உணவுகளை சமைத்துக் கொடுப்பது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சம்பா கோதுமை ரவா அடையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · Quick view
View full