காலை உணவுக்கு இனி சம்பா கோதுமை ரவா அடை இப்படி செய்து பாருங்க! 1 அடையை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

- Advertisement -

வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில் இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்து விடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும். அருமையாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டுவிடுவார்கள். அரிசி சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ரெசிபி என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

-விளம்பரம்-

இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவு என்று அனைவரும் தேடித்தேடி சில உணவு வகைகளை சமைத்து வருகின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக சத்து நிறைந்த சம்பா கோதுமை ரவா உணவு சாப்பிட்டு வந்துள்ளனர். சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.  சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் இது போன்ற தானிய உணவுகளை சமைத்துக் கொடுப்பது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சம்பா கோதுமை ரவா அடையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
3 from 1 vote

சம்பா கோதுமை ரவா அடை | Samba wheat Rava Adai In Tamil

வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியைதான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில்இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்துவிடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும். அருமையாகவீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டுவிடுவார்கள். அரிசி சேர்க்காமல் உடலுக்குஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ரெசிபி என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவு என்று அனைவரும் தேடித்தேடி சில உணவு வகைகளை சமைத்து வருகின்றனர்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Samba wheat Rava Adai
Yield: 4
Calories: 339kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 படி சம்பா கோதுமை ரவா
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 4 மிளகாய் வற்றல்
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய் துருவல்

செய்முறை

  • பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சம்பா கோதுமையை புடைத்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
  • முதலில் மிக்ஸியில் மிளகாய் வற்றல், பெருங்காயம், சீரகம், உப்பு, புளி ஆகியவற்றை போட்டு பொடியாக அரைக்கவும்.  அதன்பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் கோதுமை ரவை மற்றும் கால் கப் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் அரைத்த விழுதை போட்டு அதில் நறுக்கின வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி தோசைக்கல்லில் வைத்து அடையாக தட்டவும்.
  • அடையின் மேல் எண்ணெய் ஊற்றி வெந்ததும் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். சம்பா கோதுமை ரவா அடை தயார். இதை மிக எளிதில் செய்து விடலாம். பெரிய வெங்காயம் பிடிக்காதவர் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யலாம்.

செய்முறை குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்ற சிற்றுண்டி. இதை தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 300g | Calories: 339kcal | Carbohydrates: 77.6g | Protein: 13.7g | Fat: 1.9g | Potassium: 405mg | Fiber: 12.2g | Iron: 3.9mg