வீட்டிலயே சங்குப்பூ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி போட்டு குடிச்சு பாருங்க! இந்த சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்!!!
பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் சற்று வித்தியாசமாக சங்குப்பூ மில்க் ஷேக் செய்து பருகலாம்.

உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுவதாக கூறப்படும் இந்த சங்குப்பூக்களை தற்போது பலர் பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் குடித்து வருகின்றனர். இந்த சங்கு பூக்களில் நார்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த சங்குப் பூக்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சங்கு பூக்களில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் இது நமது எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் இந்த சங்குப் பூக்களை நாம் சேலட், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றில் கலந்து பருகலாம். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக சங்குப்பூ கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.