வீட்டிலயே சங்குப்பூ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி போட்டு குடிச்சு பாருங்க! இந்த சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்!!!

- Advertisement -

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் சற்று ‌வித்தியாசமாக சங்குப்பூ மில்க் ஷேக் செய்து பருகலாம்.

-விளம்பரம்-

உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுவதாக கூறப்படும் இந்த  சங்குப்பூக்களை தற்போது பலர் பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் குடித்து வருகின்றனர். இந்த சங்கு பூக்களில் நார்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த சங்குப் பூக்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சங்கு பூக்களில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் இது நமது எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.

- Advertisement -

 உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் இந்த சங்குப் பூக்களை  நாம் சேலட், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றில் கலந்து பருகலாம். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக சங்குப்பூ கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

Print
5 from 1 vote

சங்குப்பூ மில்க் ஷேக் | Sangu Poo Milk Shake Recipe In Tamil

உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுவதாக கூறப்படும் இந்த  சங்குப்பூக்களைதற்போது பலர் பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் குடித்து வருகின்றனர். இந்த சங்கு பூக்களில் நார்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த சங்குப் பூக்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சங்கு பூக்களில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் இது நமது எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது. மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக சங்குப்பூ கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Sangu Poo Milk Shake
Yield: 4
Calories: 57kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பால்
  • 4 நாட்டுச் சர்க்கரை அல்லது தேன்
  • 1 கப் தண்ணீர்
  • 6-8 நீல நிற சங்குப்பூ
  • 6-8 ஐஸ் கட்டிகள்

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்தவுடன் சங்கு பூக்களை அதனுள் போடவும். சிறுது நேரத்தில் பூவில் உள்ள நிறம் தண்ணீரில் இறங்கும் அப்போது அடுப்பை அணைத்து விடவும்.இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு டம்ளரில் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
  • தண்ணீர் நன்கு ஆறியவுடன் அதனுடன் காய்த்து ஆறவைத்த பால் ஒரு கப் சேர்க்கவும். சுவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும். சிறிதளவு ஐஸ் கட்டிகளையும் போட்டு அருந்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
  • இப்பொழுது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய ஆரோக்கியமான சங்குப்பூ மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 50g | Calories: 57kcal | Carbohydrates: 10.9g | Protein: 18g | Sodium: 33mg | Potassium: 98mg | Sugar: 8.3g