சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூலை முதல் வ

By Prem Kumar · 13/5/2024

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூலை முதல் வக்ரகதியில் பயணம் செய்யப்போகிறார்.

மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் தனது சொந்த ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோக, கேந்திர திரிகோண ராஜயோகம் ஆகிய யோகங்கள் உருவாகியுள்ளன. சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஜூலை 2024 முதல் 2025 வரை யாருடைய வாழ்க்கையில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம்

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் உதயமாவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைப்பதாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.

சிம்மம்

சனிபகவான் துலாம் ராசியில் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். உங்களுக்கு நிதி நிலை ரீதியாக முன்னேற்றமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். வணிகம் மற்றும் வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் சில திடீர் மாற்றங்களைக் காணலாம். பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உல்லாச பயணம் செல்வீர்கள். சுப விரையம் ஏற்படும். பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டவர்களின் மனக்கவலை தீரும்.

துலாம்

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கும் மங்களகரமான யோகத்தை கொடுத்துள்ளது. ஜூலை மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த ஆண்டில் உங்களுக்குத் தொழில் ரீதியாக கலவையான ஆண்டாக இருக்கும். உங்களுக்கு முதாதையர்களீன் சொத்து மூலம் பணம் சம்பாதிக்கும் வலுவான வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் ஆடம்பர வசதிகள் அதிகரிக்க கூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உங்களுக்கு பணம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழிலில் சிறந்த வாய்ப்புகளை பெற்றிடலாம். புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

கும்பம்

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கும் பல நன்மைகளை வழங்க உள்ளது. பொருளாதாரம் உயரவும், அதற்கான ஆதாயம் கிடைக்கவும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

Recipes AMP · Quick view
View full