வீட்டில் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்ய வீட்டில் இருக்க வேண்டிய செடி

இப்பொழுதெல்லாம் அனைவருடைய வீட்டிலும் அந்த வீட்டை அழகுபடுத்துவதற்கு விதவிதமான பூச்செடிகளும் நறுமணம் உள்ள நிறைய செடிகளும் மரங்களும் இருக்கின்றது ஆனால் அந்த செடிகளில் ஒரு சில செடிகளை நாம் வீட்டில் வைப்பது மூலம் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் உதாரணமாக நெல்லி மரம் மாமரம் வாழைமரம் ப

By Prem Kumar · 10/8/2024

இப்பொழுதெல்லாம் அனைவருடைய வீட்டிலும் அந்த வீட்டை அழகுபடுத்துவதற்கு விதவிதமான பூச்செடிகளும் நறுமணம் உள்ள நிறைய செடிகளும் மரங்களும் இருக்கின்றது ஆனால் அந்த செடிகளில் ஒரு சில செடிகளை நாம் வீட்டில் வைப்பது மூலம் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் உதாரணமாக நெல்லி மரம் மாமரம் வாழைமரம் போன்ற மரங்கள் நம் வீட்டில் இருந்தால் தெய்வீக ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும் அதோடு மட்டுமில்லாமல் மாதுளை பழ செடியும் நம் வீட்டில் இருந்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் இதைப் பற்றி விரிவாக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய மாதுளை செடி

செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தாயார் பாசம் செய்யக்கூடியவைகளில் மாதுளைச் செடியும் ஒன்று. பூஜை செய்யும்போது மகாலட்சுமி தேவியாருக்கு ஒரு முழு மாதுளம் பழம் அல்லது மாதுளை முத்துக்களை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்வது வீட்டிற்கு செல்வத்தை கொடுக்கும் பணம் வீண்விரயம் ஏற்படாமல் வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்து போகும். மாதுளம் பழ செடி மட்டுமல்லாமல் மாதுளை மரத்தின் ஒரு சிறிய குச்சி வீட்டில் உள்ள பணப்பெட்டியில் அல்லது பணப்பையில் இருந்தால் வீட்டில் பொருளாதார ரீதியான அதிர்ஷ்டம் ஏற்படும்.

வீட்டில் மாதுளம் பழம் செடி

வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் தீர்ந்து பொருளாதார நிலை மாறுவதற்கு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய அஸ்த நட்சத்திர தினத்தில் நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டின் தோட்டப்பகுதியில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஒரு மாதுளம் பழ செடியை நட்டு வைத்து வளர்த்து வர வேண்டும். வீட்டில் தோட்டம் இல்லாதவர்கள் வீட்டிற்குள்ளேயே கிழக்கு பகுதியில் ஒரு மண் தொட்டியில் மாதுளம் பழ செடியை நட்டு வளர்க்கலாம். புதிதாக வீடு கட்டி குடியேறுபவர்கள் அந்த வீட்டிற்கு குடி போவதற்கு முன்பாக வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஒரு மாதுளம் பழ செடியை நட்டு வைப்பது மிகவும் சிறந்தது.

மாதுளம் பழம் செடிக்கு பூஜை

மாதுளம் பழச் செடியை வீட்டில் நட்டு வைத்த பிறகு அதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எப்போதுமே பசுமையாக பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பூஜைகள் செய்யும் போது இந்த மாதுளை செடிக்கும் சிறிதளவு மஞ்சள் கலந்த தண்ணீர் ஊற்றி தீப தூப ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் மட்டுமில்லாமல் தொழில் செய்யும் இடம் வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்துள்ள நிலம் என அனைத்திலுமே இந்த மாதுளம் பழ செடியை நட்டு வைத்து வளர்த்து வந்தால் அதற்கு பூஜைகளும் செய்து வந்தால் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மேலும் வீடு கட்ட வாங்கி வைத்துள்ள நிலத்தில் விரைவில் வீடு கட்டியும் குடியேரலாம்.

இதனையும் படியுங்கள் : இந்த இரண்டு செடிகள் வீட்டில் இருந்தால் போதும் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழலாம்!

Recipes AMP · Quick view
View full