வாராந்திர ராசிபலன் 30 செப்டம்பர் முதல் 6 அக்டோபர் 2024 வரை!
மேஷம் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்து கொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம
மேஷம்
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்து கொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
ரிஷபம்
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்குகளில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குலதெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் ஆதாயமும் கிடைப்ப தற்கான சந்தர்ப்பம் ஏற்படும். தந்தைவழியில் எதிர்பாராத பொருள்சேர்க்கை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும்.
கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இந்த வாரம் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வேலை, தொழிலில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களும், வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள். வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும்.
சிம்மம்
சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த வாரம் தொடக்கத்தில் அரசியலில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த பதவி அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மூத்தவர்களின் பாராட்டும், ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் துறையில் சாதகமான முடிவு பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
துலாம்
துலாம் ராசிகாரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியின் காரணமாக சிலருக்கு தற்காலிகமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். அரசாங்க ஒப்பந்தங்கள் அனுகூலமாக நடக்கும். எதிர்காலத்திற்காக திட்டமிட்டு சேமிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களாலும், சகோதரர்களாலும் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். இந்த வாரம் வீண் வாக்குறுதிகளை அள்ளி வீசாதீர்கள். தேவையில்லாத சிக்கல்களை கொண்டு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களின் பொறுப்புகளை நிறைவேற்ற வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் செலவு மட்டும் பிள்ளைகளின் கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்க வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும். அனாவசியமான செலவுகளை பிள்ளைகள் இழுத்து விடுவார்கள்.
மகரம்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. அலங்காரப் பொருள் விற்பனையில் அமோக லாபம் பார்ப்பீர்கள்.
கும்பம்
குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கட்டுமான துறையில் முழு முயற்சியுடன் இறங்குவீர்கள். புதிய கடைகள் திறப்பதற்கு ஏற்பாடு செய்வீர்கள்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த வாரம் புதிய தொழில்களோ புதிய முதலீடுகளோ இப்பொழுது வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
இதனையும் படியுங்கள் : புரட்டாசியில் அதிர்ஷ்டம் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!