- Advertisement -
Home ஆன்மிகம் புரட்டாசியில் அதிர்ஷ்டம் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!

புரட்டாசியில் அதிர்ஷ்டம் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!

- Advertisement -

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அறிவியலில் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அளிக்கப்போகிறது. பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில் பலர் விரதங்கள் இருந்து பெருமாளை முழுவதுமாக தரிசிப்பதுண்டு. இந்த தெய்வீகமான மாதத்தில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கப் போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

புரட்டாசி மாதத்தில் மேஷ ராசிக்கு பொருள் சேரக்கூடிய மாதமாக இருக்கிறது புதிய வீடு நிலம் வாகனங்கள் வாங்க கூடிய யோகம் கிடைக்கும். ஒரு சிலர் புரட்டாசி மாதத்தில் எந்த பொருட்களும் வாங்க மாட்டார்கள் ஆனால் அப்படி வாங்கவில்லை என்றால் கூட அந்த பொருளை புக் செய்து வைத்துக் கொள்ளலாம். மிக மிக சிறந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு விளங்கும் மேலும் இந்த மாதத்தில் தேவையில்லாமல் யாருடனும் பேச்சுவார்த்தைகள் வைக்க வேண்டாம்.

- Advertisement -

கன்னி ராசி

புதிய வேலை வாய்ப்புகள் தொடங்குவதற்கு இந்த மாதம் உகந்த மாதம்.மேலும் எதிர்பாராத விதமாக பண வரவுகள் பல வகைகளில் இருந்து வரும் கடன் இருந்தால் அது கொஞ்சம் அடைந்து விடும் மேலும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இந்த மாதத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம் எனவே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நன்றாக தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி ராசிக்கு இந்த மாதம் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ஒரு மாதம். நிலம் வீடு கார் என அனைத்தும் வாங்குவதற்கு உகந்த மாதம் மேலும் இவ்வளவு நாட்களாக உங்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த சர்க்கரை வியாதி கால் வலி மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வயதானாலும் கூட மிகவும் இளமையாகவே அனைத்து வேலைகளையும் செய்து ஆரோக்கியமாக இருப்பீர்கள் மிகவும் நல்ல விஷயங்கள் அனைத்தும் இந்த மாதத்தில் உங்களுக்கு நடக்கும் ஆனால் யாரிடமும் தேவையில்லாமல் அதிகமாக பேச வேண்டாம்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் வேலையில் இருந்த பிரச்சனைகளும், கடன் சம்பந்தமான பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். இந்த மாதத்தில் நீங்கள் கொஞ்சமாவது ஓய்வெடுப்பீர்கள் நல்ல சூழலில் அமைந்து இதுவரையில் இருந்த மோசமான நிலைமை மாறும் உங்களுக்கு இருந்த கெட்டது அனைத்துமே முடிந்து நல்ல காலம் தொடங்கும்.

இதனையும் படியுங்கள் : செப்டம்பர் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தால் ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்!