Home ஆன்மிகம் செப்டம்பர் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தால் ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்!

செப்டம்பர் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தால் ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்!

2024-ம் ஆண்டிற்கான இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு தொடங்கி காலை 10.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் நிகழும் நாளில் தான் பித்ரு பட்சம் தொடங்குகிறது. அதுவும் இந்த பித்ரு பட்ச காலத்தின் தொடக்கத்தில் சந்திர கிரகணமும், இறுதியில் சூரிய கிரகணமும் நிகழவுள்ளதால், இந்த கிரகணமானது சற்று சிறப்பானது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது எனினும் இதன் தாக்கம் சில ராசிகளை பாதிக்கும் என ஜோதிடர் சக்ரபாணி பட் கூறியுள்ளார். ஜோதிடத்தின் படி, கிரகணங்களானது மனித வாழ்க்கையில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகண நாளானது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. இந்த பதிவில் யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷபம்

சந்திர கிரகணத்தின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி வருமானம் அதிகரிக்கும். திடீரென ஒரே இரவில் செல்வம் பெருகும். தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். நண்பரின் உதவியைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் திறக்கப்படும். நண்பர்களின் ஆதரவு பயனுள்ளதாக அமையும். வேலை தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆபத்து தற்போது முடிவுக்கு வரும். மிதுன ராசியினரின் சொத்துக்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். சமுகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பம், வேலை தொடர்பாக இருந்த மன வருத்தங்கள் நீங்கும். செல்வம் பெருகும். திருமண உறவில் ஆதரவான சூழல் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் மூலம் பெற்றோர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். முக்கியமாக நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் எதிரிகளின் தொல்லை குறையும். உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் சாதக பலன்கள் உண்டாகும். குடும்ப விவகாரங்கள் சாதகமாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பலன் அடைவார்கள். நிதிக் கவலைகள் நீங்கும். சொத்து வாங்குதல் அதிகரிக்கும். நிலம் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வெளிநாடு, வெளியூர் தொடர்பாக கல்வி, வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

-விளம்பரம்-

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கலாம். பணியிடத்தில் இனிய வார்த்தைகளால் காரியம் சாதிப்பார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தி தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் திட்டங்கள் நல்ல பலன்களைத் தரும்.

இதனையும் படியுங்கள் : புரட்டாசி மாதம் பிறந்தவுடன் ஜாக்பாட் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!