சுவையான சேப்பங்கிழங்கு கார குழம்பு ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருச
தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு, புளிக்குழம்பு போன்றவை. அந்த வகையில் பெரும்பாலான வீட்டில் வாரத்திற்கு ஏழு நாட்களில் ஓரிரு நாள் தான் அசைவம் இருக்கும், மற்ற நாட்களில் சைவம் தான் அதிலும் குறிப்பாக இரண்டு நாளில் சாம்பார், புளி குழம்பு கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள்.
எப்போதும் ஒரே போன்ற சாம்பார், ரசம், புளிக்குழம்பு என வைத்து சலித்துப்போனவர்களுக்கு கார குழம்பு தான் சரியான ஆப்ஷன். அதிலும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்யும் போது அதன் சுவையே தனியாக இருக்கும். இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. இந்த சேப்பங்கிழங்கு வைத்து பொரியல், வறுவல், ரோஸ்ட் என பலவிதமான ரெசிபியை செய்து இருப்போம்.
இன்று சேப்பங்கிழங்கு வைத்து காரசாரமான கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கார குழம்பை சுட சுட இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம். இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும். இப்போது சுவையான சேப்பங்கிழங்கு கார குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைலில் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!