- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- andhra, Indian
- Course
- Side Dish
சேப்பக்கிழங்கு வச்சு கூட்டு செஞ்சிருப்பீங்க கார குழம்பு வச்சுருப்பீங்க. ஆனா சேப்பக்கிழங்கு வச்சு நிறைய பேருக்கு ரோஸ்ட் தான் ரொம்ப பிடிக்கும் அதுலயும் நல்லா காரசாரமா இருந்துச்சுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இப்ப நம்ம நல்லா காரசாரமான ஆந்திரா ஸ்டைலில் ஒரு சூப்பரான சேப்ப கிழங்கு ரோஸ்ட் செய்ய போறோம். இந்த சேப்பக் கிழங்கு ரோஸ்ட் ரெசிபி ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க.
ஒரே ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் நம் வீட்ல இருக்குற எல்லாருமே அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க. இதுக்கு நம்ம பூண்டு சேர்க்க போறோம் அந்த பூண்டு தோல் உரிக்காமல் அப்படியே சேர்க்க வேண்டும் அப்பதான் சாப்பிடுவதற்கு நல்லா மொறு மொறுன்னு சூப்பரா இருக்கும். மேலும் கடைசியாக அரிசி மாவு தூவும் போது ரொம்பவே டேஸ்டான சூப்பரான ஒரு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி கிடைக்கும்.
தயிர் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பாருங்க. இந்த சேப்பக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ஃபேவரட் ஆக மாறிவிடும். ரொம்ப ரொம்ப சிம்பிளா ஏதாவது ஒரு சாப்பாடு செஞ்சு அதுக்கு இந்த வறுவல் செஞ்சு வச்சுட்டீங்கன்னா போதும் கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
சேப்பங்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வெந்ததும் தோல் உரித்து வட்ட வடிவில் நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள கிழங்கை சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இறுதியாக அரிசி மாவு தூவி நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சேப்பக்கிழங்கு ரோஸ்ட் தயார்.






