கீரைல அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக்கீரை நிறைய கீரை வகைகள் இருக்கு கீரை வகைகள் நம்ம தினமும் ஒன்னு ஒன்னு சாப்பிட்டாலே நம்ம உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராம ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையிலபொதுவா இந்த புளிச்சக்கீரை ரெசிபி ஆந்திரா ஸ்டைல்ல தான் ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கும் ஆனா இப்ப எல்லாம் எல்லா இடத்திலுமே செய்ய ஆரம்பிச்சாச்சு புளிச்சக்கீரை ரெசிபி ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆகவே இருக்கும். இந்த புளிச்சக்கீரை வச்சு நிறைய பேரு நிறைய விதமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா காரசாரமா புளிச்சக்கீரை பருப்பு ரெசிபி செய்ய போறோம்.
இந்த புளிச்சக்கீரை பருப்பு ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் குழந்தைகளுக்கு சாதம் போட்டு கிளறி டிபன் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம் மதியானம் லஞ்சுக்கு வீட்ல சூப்பரா இந்த ரெசிபியை வச்சு அது கூட சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு வறுவல் அப்பளம் பொரிச்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப சிம்பிளான டிஷ்ஷா இருந்தாலும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான சுவையான டிஷ் இது. கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை சாப்பிடுங்க.
இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அதனால சாப்பாடு கொஞ்சம் அதிகமாவே செஞ்சு வச்சுக்கோங்க. இந்த ருசியான டேஸ்டான புளிச்சக்கீரை பருப்பு ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. இதுக்கு அப்பளம் பொரிக்க முடியலன்னா கூட ஊறுகாய் வைத்து சாப்பிட்டாலே அவ்ளோ ருசியா இருக்கும். புளிச்சக்கீரை கிடைச்சா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை புளிச்சக்கீரை பருப்பு செஞ்சு பாருங்க. கண்டிப்பா டேஸ்ட் அட்டகாசமாவே இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான புளிச்சக்கீரை பருப்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஆந்திரா புளிச்சக்கீரை பருப்பு | Andhra Pulicha Keerai Paruppu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கைப்பிடி புளிச்சக்கீரை
- 2 தக்காளி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பெரிய வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு புளி
- 50 கி துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
செய்முறை
- ஒரு குக்கரில் துவரம் பருப்பு தக்காளி கைப்பிடி அளவு புளிச்சக்கீரை புளி, பூண்டு உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
- ஒரு கடாய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலை பருப்பு பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் எண்ணெயிலேயே வதக்கிய பிறகு பருப்பை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க!