சுக்கிரனால் இனி இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கும்! பண மழை கொட்டும்!!

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் ராசியை மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் அவ்வப்போது கடந்து செல்கின்றன. அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இடத்தை பொறுத

By Prem Kumar · 6/8/2024

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் ராசியை மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் அவ்வப்போது கடந்து செல்கின்றன. அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், ஈர்ப்பு, காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் ஆகஸ்ட் 11ம் தேதி காலை 11:15 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்து சுக்கிரன் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்த நட்சத்திரதில் இருப்பார். இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலனைத் தரும். அந்த ராசிகள் யார் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

தைரியமும் வீரமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணி பாராட்டப்படும். பதவி உயர்வு பெறலாம். சுற்றுலா செல்லலாம். திருமண வாழ்வில் இருந்து விரிசல் நீங்கும். நீங்கள் அலுவலகத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். லாபகரமாக மாறும். நீங்கள் ஒரு பயணம் செல்வீர்கள். இது பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்கும். தொழில் மாற்றம் மற்றும் இடம் மாற்றம் உண்டு. பெரியோர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதிக லாபம் ஈட்டலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அன்பும் ஈர்ப்பும் வாழ்க்கையில் நிலைத்திருக்கும். திருமண வாழ்க்கை மேம்படும். குழந்தை இல்லாத கடக ராசிக்காரர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வங்கி கணக்கில் சேமிப்பு உயரும். ஏற்கனவே பழைய பாக்கியை நீங்கள் அடைப்பீர்கள்.

துலாம்

வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை பெறலாம். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பச் சூழலில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீங்கள் உங்கள் காதலன் அல்லது நண்பருடன் டேட்டிங் செல்லலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க புதிய வளங்களைப் பெறலாம். புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவீர்கள். கடன் சுமை குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நண்பரை சந்திப்பீர்கள். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வருவீர்கள்.

கும்பம்

செல்வமும் வளமும் பெருகும். சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வயிறு சம்பந்தமான தொந்தரவு இருந்தவர்களுக்கு தற்போது நிவர்த்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண நடக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. புதிய வாகனத்தை வாங்கி மகிழ போகிறீர்கள். அலுவலகத்தில் புதிய வேலைகளை மேற்கொள்ளுவீர்கள். நீங்கள் தொழில் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நிலையானவராக இருப்பீர்கள்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால், குபேர யோகம் 2025 க்குள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்

Recipes AMP · Quick view
View full