Home ஆன்மிகம் குரு பெயர்ச்சியால், குபேர யோகம் 2025 க்குள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்

குரு பெயர்ச்சியால், குபேர யோகம் 2025 க்குள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்

ரிஷப ராசியில் குரு பகவான் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது வருடத்திற்கு ஒருமுறையாவது குரு தன்னுடைய மாற்றத்தை நிகழ்த்துவார் இப்பொழுது மே ஒன்றாம் தேதி நுழைந்த குரு பகவான் இனிமேல் அடுத்த வருடம் தான் தன் மாற்றத்தை நிகழ்த்துவார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் ரிஷப ராசியில் தன்னுடைய பயணத்தை தற்பொழுது தொடங்கியுள்ளார் ரிஷப ராசிக்குள் நுழைந்தவுடனேயே அடுத்த வருடத்திற்குள் குபேர யோகம் உருவாகி அதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டங்கள் நிகழப் போகிறது. எனவே அந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் வரையில் பண பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற போகின்ற ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷப ராசி

வியாழன் மகிமையின் அதிபதியாக கருதப்படுகிறார் இவர் ரிஷப ராசிக்குள் நுழைவதால் குபேர யோகம் உருவாகி அதன் மூலம் பலவிதமான பலன்கள் கிடைக்கும் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமை ஏற்படும் செலவுகள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஒரு சில அனுபவங்களை கற்றுக் கொண்டு செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள் இந்த காலகட்டத்தில் புதிய பணிகளை நீங்கள் தொடங்குவது உங்களுக்கு சாதகமானதாகவும் அமையும். உங்களுடைய திருமண வாழ்க்கையும் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் அமையும்.

சிம்ம ராசி

வியாழனின் சஞ்சாரத்தால் உருவாகி இருக்கின்ற குபேர யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் எல்லாம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் குறைந்து வீட்டில் பொருளாதார நிலைமையும் மேம்பட்டு செல்வாக்கின் உச்சத்திற்கு செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மேலும் தொழிலிலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைத்து தொழிலில் பல முன்னேற்றங்கள் கிடைக்கும்.

கன்னி ராசி

வியாழனின் சஞ்சாரத்தால் கன்னி ராசிக்கு குபேர யோகம் உண்டாகி அதனால் உங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் மறுபடியும் தொடங்கும் வேலை பார்க்கின்ற இடத்தில் பதவி உயர்வு கிடைத்து பல முக்கியமான பணிகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ இந்த நேரம் உங்களுக்கு ஏற்றது வேலை சம்பந்தமாக வெளியூர் பயணங்களும் உங்களுக்கு கைகூடும். உங்களுடைய சந்ததியினர்களால் பலவிதமான நல்ல செய்திகளும் உங்களுக்கு வந்து சேரும் மொத்தத்தில் இந்த குபேர யோகம் உங்களுக்கு பலவிதமான யோகங்களை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : புதனின் வக்கிர பெயர்ச்சியால் பண மழையில் நனைய போகும் 5 ராசிக்காரர்கள்!!

-விளம்பரம்-