Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் புதனின் வக்கிர பெயர்ச்சியால் பண மழையில் நனைய போகும் 5 ராசிக்காரர்கள்!!

புதனின் வக்கிர பெயர்ச்சியால் பண மழையில் நனைய போகும் 5 ராசிக்காரர்கள்!!

ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரையில் புதன் வக்ரகதியில் இயங்கும் நிலையில் அதன் பிறகு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரையில் சிம்மத்தில் புதன் இயங்கும் நிலை வரும். அதன் பிறகு புதன் சிம்மத்தில் வக்ரகதி நிலையில் இருந்து நிவர்த்தி பெற்று மீண்டும் வழக்கமாக இயங்க தொடங்குவார். புதனின் இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மேஷ ராசி

புதனின் இந்த இயக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு உறவினர்களிடையே ஒரு நல்ல ஆரோக்கியமான உறவு நீடிக்கும். இவ்வளவு காலமாக உங்களிடம் இருந்த திறமை தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான தன்னம்பிக்கை அதிகரித்து அதன் மூலம் ஒரு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

சிம்ம ராசி

புதனின் இந்த வக்ரகதி இயக்கத்தால் சிம்ம ராசிக்காரர்கள் மேதாவிதனத்தை அடைந்து அதனால் ஒரு சில புத்திசாலித்தனமான செயல்பாடுகளை செய்து அதன்மூலம் அனைவருடைய கவனத்தையும் பெறுவார்கள். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை அடைந்து உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் எப்பொழுதும் செயல்படுவார்கள்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று காலகட்டத்தில் சோகமான மனநிலை மாறி மகிழ்ச்சியான மனநிலை அமையும். கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நீங்கள் நினைத்த காரியங்களான வீடு கட்டும் வேலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய தகுதியை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளை கையாண்டு அதில் வெற்றியும் அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத சில நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு அமையும்.

கன்னி ராசி

புதன் கன்னி ராசியிலிருந்து வக்ரகதிக்கு செல்வதால் எதிர்பாராத சில பண வரவுகள் கன்னி ராசியினருக்கு கிடைக்கும். எதிர்பாராத பலவிதமான நன்மைகளும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நடந்தேரும். மொத்தத்தில் புதனின் இந்த வக்ரகதி உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியதாக இருக்கும்.

-விளம்பரம்-

மீன ராசி

தற்போது பொருளாதார ரீதியாக நீங்கள் சந்திக்கும் கஷ்டங்கள் எல்லாம் புதனின் பிற்போக்கு நிலையின் இரண்டாம் பகுதியில் நீங்கிவிடும். உறவினர்கள் உங்களுடைய மனதை புரிந்து கொள்ளும் நாட்கள் சீக்கிரத்தில் வரும் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றங்கள் கிடைக்கும். ஏற்கனவே தொழிலில் இருக்கிறீர்கள் என்றால் அதில் நல்ல லாபமும் முன்னேற்றமும் உங்களுக்கு கிடைக்கும்.