கருவேப்பிலை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

பொதுவா நம்ம என்ன ரெசிபிஸ் செஞ்சாலும் சட்னியில் இருந்து சாம்பார் புளி குழம்பு கலவை சாதங்கள் எல்லாத்துக்குமே கருவேப்பிலை சேர்த்து தாளிப்போம். கருவேப்பிலை சேர்த்து தாளிக்கும் போது சுவை கூடுதலாகவும் மணமாகவும் இருக்கும். கூடுதல் சுவை கொடுக்குற இந்த கருவேப்பிலையை கண்டிப்பா நம்ம சாப்பிட

By Prem Kumar · 26/4/2025

பொதுவா நம்ம என்ன ரெசிபிஸ் செஞ்சாலும் சட்னியில் இருந்து சாம்பார் புளி குழம்பு கலவை சாதங்கள் எல்லாத்துக்குமே கருவேப்பிலை சேர்த்து தாளிப்போம். கருவேப்பிலை சேர்த்து தாளிக்கும் போது சுவை கூடுதலாகவும் மணமாகவும் இருக்கும். கூடுதல் சுவை கொடுக்குற இந்த கருவேப்பிலையை கண்டிப்பா நம்ம சாப்பிடவே மாட்டோம். அதை எடுத்து ஒதுக்கிதா வைப்போம். ஆனா கருவேப்பிலை சாப்பிடுவதால் நம் உடம்புக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும்.

கருவேப்பிலை சாப்பிடாதவங்களுக்கு இந்த மாதிரி தொக்கு சட்னி செஞ்சு கொடுத்தீங்கன்னா சாப்பிடுவாங்க. இது சாப்பிடுவதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்சனை சரியாகும். இப்போ இருக்கிற நிறைய பேருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிற பிரச்சினை இருக்கு கர்ப்பிணி பெண்களாக இருக்கட்டும் சின்ன குழந்தைகளாக இருக்கட்டும், நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு அவங்க எல்லாரும் அடிக்கடி இந்த கருவேப்பிலையை சாப்பிட்டு வர எல்லா பிரச்சினையும் சரியாகும்.

அந்த வகையில நம்ம கருவேப்பிலை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பார்த்தால் வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டார்கள். இந்த ரெசிபி செய்தால் ஒரு மாதம் வரைக்கும் பிரிட்ஜூக்குள் வைத்து பயன்படுத்தலாம். கெட்டே போகாது. அவ்ளோ ருசியாக இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம். கண்டிப்பாக மீதம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. சத்தான இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க.

வீட்லயும் கூட லஞ்ச்க்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கூடவே அப்பளம் பொரிச்சு சாப்பிட்டு பாருங்க. நல்லா‌ காரசாரமாக புளிப்பாக இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா அடிக்கடி செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுப்பீங்க. புளித்தொக்கு தக்காளி தொக்கு பூண்டு தொக்கு மாதிரி இதையும் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்ப‌ வாங்க‌ இந்த கருவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இதுவரை எத்தனையோ தொக்கு செய்திருப்பீர்கள் ஆனால் ஒரு முறை இந்த இஞ்சி கார தொக்கு செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full