இதுவரை எத்தனையோ தொக்கு செய்திருப்பீர்கள் ஆனால் ஒரு முறை இந்த இஞ்சி கார தொக்கு செய்து பாருங்கள்!!

- Advertisement -

வீட்ல குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட கொஞ்சம் சலிப்பா இருந்துச்சு அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த இஞ்சி கார தொக்கு செஞ்சு அசத்துங்க. இந்த தொக்கை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் எல்லாத்துக்குமே வெச்சு சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். செரிமான பிரச்சனை இருக்கிறவங்க காய்ந்து மிளகாய் கொஞ்சம் குறைச்சுக்கிட்டு இந்த தொக்கு செஞ்சு சாப்பிட்டீங்கன்னா செரிமான பிரச்சனை சரியாகும். இதுக்கு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க தேவை இல்லை.

-விளம்பரம்-

ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான இஞ்சி கார தொக்கு செஞ்சுடலாம். அவசரத்துக்கு ஏதாவது செய்யணும் அப்படின்னா கண்டிப்பா இந்த தொக்கு உங்களுக்கு கை கொடுக்கும். வீட்ல பழைய சாதம் இருந்துச்சுன்னா அதை காலி பண்றதுக்கு இந்த சூப்பரான இஞ்சி கார தொக்கு செஞ்சிடலாம். பழைய சாதம் ஃபுல்லாவே காலி ஆகிடும். சுடு சாதத்திலையும் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம். சைடு டிஷ் கூட எதுவும் தேவைப்படாது. அவ்ளோ அருமையா இருக்கும்.

- Advertisement -

சுவையான சூப்பரான இந்த இஞ்சி கார தொக்கை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க. தக்காளி தொக்கு, மல்லி தொக்கு, வேர்க்கடலை தொக்கு அப்படின்னு நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை வெங்காயம், தக்காளி எதுவுமே இல்லாத இந்த இஞ்சி கார தொக்கு செஞ்சி பாருங்க. காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த சட்னி ரொம்ப ரொம்ப பிடிக்கும். சளி இருமல் இருந்தா கூட இந்த தொக்கை சாப்பிட்டீங்கன்னா பறந்து போய்விடும். இப்ப வாங்க சுவையான இந்த இஞ்சி கார சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

இஞ்சி கார தொக்கு | Ginger Kara Thokku Recipe In Tamil

வீட்ல குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட கொஞ்சம் சலிப்பா இருந்துச்சு அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த இஞ்சி கார தொக்கு செஞ்சு அசத்துங்க. இந்த தொக்கை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் எல்லாத்துக்குமே வெச்சு சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். செரிமான பிரச்சனை இருக்கிறவங்க காய்ந்து மிளகாய் கொஞ்சம் குறைச்சுக்கிட்டு இந்த தொக்கு செஞ்சு சாப்பிட்டீங்கன்னா செரிமான பிரச்சனை சரியாகும். இதுக்கு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க தேவை இல்லை. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான இஞ்சி கார தொக்கு செஞ்சுடலாம். அவசரத்துக்கு ஏதாவது செய்யணும் அப்படின்னா கண்டிப்பா இந்த தொக்கு உங்களுக்கு கை கொடுக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Ginger Kara Thokku
Yield: 5 People
Calories: 80kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் மல்லி
  • 50 கி இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • புளி எலுமிச்சை அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 காய்ந்த மிளகாய்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் மல்லி, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதனுடன் புளியை ஊற வைத்து சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும் அவ்வளவுதான் சுவையான இஞ்சி கார தொக்கு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 80kcal | Carbohydrates: 11g | Protein: 18.2g | Fat: 2.1g | Sodium: 75mg | Potassium: 122mg | Fiber: 3.4g | Vitamin A: 43IU | Vitamin C: 203mg | Calcium: 19mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : பாலக்கீரை தொக்கு ஒரு தடவை காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க ருசியாக இருக்கும்!!