- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கீரை வகைகளில் பால கீரையில் நிறைய போலிக் ஆசிட் இரும்பு சத்துக்கள் இருக்கு. இந்த பாலக்கீரை வாரத்தில் இரண்டு தடவை சாப்பிடுவது மூலமா உடம்புக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். ஆரோக்கியமான இந்த கீரையில் நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. பாலக் பன்னீர், பாலக்கீரை கடையல், பாலக்கீரை கட்லெட் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் ஆனா இன்னைக்கு நல்லா காரசாரமா ஒரு சூப்பரான பாலக்கீரை தொக்கு ரெசிபி பாக்க போறோம். இந்த ரெசிப்பிய பாக்குறதுக்கு வாயில எச்சில் ஊறும். அந்த அளவுக்கு இந்த தொக்கு சூப்பரா இருக்கும்.
இந்த ரெசிபிக்கு எல்லாரும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. சுட சுட சாதத்துல இந்த பாலக்கீரை தொக்கு போட்டு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். சுவையான இந்த பாலக்கீரை தொக்கு ரெசிபிய கண்டிப்பா எல்லாரும் செஞ்சு பார்க்கணும். பாலக்கீரை கடையல் பிடிக்காதவங்களுக்கு இந்த பாலக்கீரை தொக்கு ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். பாக்குறதுக்கு நல்லா கலர்ஃபுல்லா சாப்பிடுவதற்கு டேஸ்ட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே மாதிரியா எப்போவுமே குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சி கொடுத்தீங்கன்னா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.
கீரையை சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம்பிடிக்கிற குழந்தைகள் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு சாதத்துல இந்த தொக்கு போட்டு பிசைந்து ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாம பெரியவங்களுக்கும் கூட லஞ்ச் பாக்ஸ்க்கு இதை கொடுத்துவிடலாம் டேஸ்ட் சூப்பரா இருக்கும். சைட் டிஷ்க்கு அப்பளம் மட்டும் வறுத்துக்கிட்டாலே போதும் அவ்ளோ சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பாலக்கீரை தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
பாலக்கீரையை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பெரிய வெங்காயம் பூண்டு தக்காளி ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு பாலக் கீரையை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வெந்ததும் இறக்கினால் சுவையான பாலக்கீரை தொக்கு தயார்.






