சிம்பிளான இந்த முட்டை மிளகு வறுவல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

முட்டை வச்சு மிளகு வறுவல் நீங்க வித்தியாச வித்தியாசமா பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை முட்டை மிளகு வறுவல் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ஈஸியாக இருக்கும் சாப்பிடுறதுக்கும் ரொம்ப ருசியா இருக்கும். இந்த முட்டை வறுவல் ரெசிபிக்கு நமக்கு பெருசா எந்த பொருட்களு

By Prem Kumar · 7/9/2025

முட்டை வச்சு மிளகு வறுவல் நீங்க வித்தியாச வித்தியாசமா பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை முட்டை மிளகு வறுவல் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ஈஸியாக இருக்கும் சாப்பிடுறதுக்கும் ரொம்ப ருசியா இருக்கும். இந்த முட்டை வறுவல் ரெசிபிக்கு நமக்கு பெருசா எந்த பொருட்களும் தேவைப்படாது வெறும் நான்கு பொருட்கள் வைத்து சூப்பரா இந்த முட்டை வறுவல் செஞ்சுடலாம். சுவையான இந்த முட்டை வறுவல் செய்றதுக்கு பெரிய வெங்காயம் மிளகு தூள், உப்பு எண்ணெய் இது மட்டுமே போதுமானது. பெருசா மசாலா அரைச்சு வதக்கி செய்யணும் அப்படின்ற அவசியமே கிடையாது பெரிய வெங்காயம் மட்டும் கொஞ்சம் அதிகமா சேர்த்து செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

இந்த குளிர் காலத்துல ரொம்ப சளி இருமல் காய்ச்சல் இருந்துச்சுன்னா ஈஸியான ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த முட்டை மிளகு வறுவல் செஞ்சு சாப்பிடுங்க கண்டிப்பா இருமல் சளி எல்லாம் பறந்து போயிடும். இந்த முட்டை வறுவல் ரெசிபி தயிர் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் சாதம், பிரியாணிக்கு கூட ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். தடபுடலாக விருந்து செய்யும்போது உங்களுக்கு முட்டை மசாலா செய்யறதுக்கு நேரம் இல்லன்னா இந்த மாதிரி ஒரு சிம்பிளான முட்டை மிளகு வறுவல் செஞ்சு வச்சுடுங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்குன்னு விரும்பி சாப்பிடுவாங்க.

வீட்ல எதுவுமே இல்லனா கூட ரசம் இல்லனா பருப்பு வச்சு அதுக்கு சைட் டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு மிளகு வறுவல் செஞ்சிங்கனா கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க. சிம்பிளா இருந்தாலும் ரொம்பவே ருசியா இருக்கும். ஏதாவது சிம்பிளான வெரைட்டி சாதம் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடும்போது இந்த முட்டை மசாலா கொடுத்து விடுங்கள். விரும்பி சாப்பிட்டு விட்டு வருவாங்க. இப்ப வாங்க இந்த சிம்பிளான முட்டை மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை மசாலா டோஸ்ட் இந்த மாதிரி செய்ங்க நிமிசத்துல காலியாயிடும்!

Recipes AMP · Quick view
View full