- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
எப்பவுமே முட்டை வச்சு முட்டை கிரேவி, முட்டை பிரியாணி, முட்டை தொக்கு செய்யாம முட்டை வச்சு இந்த வித்தியாசமான முட்டை மசாலா டோஸ்ட் செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு காலைல பிரேக் பாஸ்ட் ஆகும் மதியத்துக்கு லஞ்ச் ஆகவும் ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸ் ஆகவும் கூட கொடுக்கலாம். என்ன ரெசிபி செஞ்சாலும் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகள் கூட இந்த முட்டை மசாலா டோஸ்ட் செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. டிபன் பாக்ஸ்க்கு மட்டும் கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலியாகிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும்.
இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான் பத்தே நிமிஷத்துல இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம் அதனால காலையில நீங்க கொஞ்சம் லேட்டா எந்திரிச்சிட்டா கூட இந்த அருமையான ரெசிபியை 10 நிமிஷத்துல செஞ்சு குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிடலாம். இதுக்கு ரெண்டு முட்டை இருந்தா போதும் சட்டு சட்டுன்னு செஞ்சிடலாம். இதுக்கு நிறைய நேரம் எல்லாம் தேவைப்படாது பெரிய வெங்காயம் நறுக்குறதுக்கு மட்டும் தான் நமக்கு நேரம் தேவைப்படும் மத்தபடி டக்குனு ரெடியாகிவிடும்.
இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. சின்ன குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் கூட இந்த முட்டை மசாலா டோஸ்ட் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நார்மலா நீங்க ப்ரெட் ஆம்லெட் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா அந்த மாதிரி இல்லாம இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதுல நம்ம சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கறதால கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
இந்த முட்டை மசாலா டோஸ்டுக்கு நீங்க கோதுமை பிரட் மைதா பிரட் மில்லட் பிரட் அப்படின்னு எது வேணும்னாலும் எடுத்துக்கலாம். எல்லாமே ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இந்த டோஸ்ட் ஒரு தடவ சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க. இது செய்றது ஈஸி அப்படின்றதால பெரிய கஷ்டம் ஒன்னும் கிடையாது எப்ப கேட்டாலும் முட்டையும் பிரட் இருந்தால் டக்குனு செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த ருசியான முட்டை மசாலா டோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் முட்டை வறுவல் இப்படி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து அதன் மேல் பிரட் வைத்து ஒரு பக்கம் முட்டை கலவையை தேய்த்து வந்ததும் மறுபக்கமும் முட்டை கலவையை தேய்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டை மசாலா டோஸ்ட் தயார்.






