பூண்டு பொடி இந்த மாதிரி செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க!

பொதுவா வீட்ல இருக்கிற தாய்மார்களும் சரி, வேலைக்கு போறவங்களும் சரி எல்லாருமே உங்க வீட்ல சாம்பார் பொடி, ரசப்பொடி மிளகாய் பொடி இட்லி பொடி எல்லாமே அரைச்சு ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க. அதுதான் ரொம்ப ரொம்ப வசதியா இருக்கும் அந்த வகையில ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான இந்த பூண்டு பொடியையும் வீட்ல

By ·

பொதுவா வீட்ல இருக்கிற தாய்மார்களும் சரி, வேலைக்கு போறவங்களும் சரி எல்லாருமே உங்க வீட்ல சாம்பார் பொடி, ரசப்பொடி மிளகாய் பொடி இட்லி பொடி எல்லாமே அரைச்சு ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க. அதுதான் ரொம்ப ரொம்ப வசதியா இருக்கும் அந்த வகையில ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான இந்த பூண்டு பொடியையும் வீட்ல அரைச்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க. சட்டென பசி எடுக்கும் போது ரெண்டு தோசை சுட்டு பூண்டு பொடி கூட நல்லெண்ணெய் ஊத்தி கலந்து சாப்பிட்டால் வயிறு நிரம்பிடும் இதுக்குன்னு சட்னி அரைக்கணும் அப்படின்ற அவசியம் இல்லை.

எங்கயாவது நீங்க அவசர அவசரமாக கிளம்பும்போது இந்த பூண்டு பொடி உங்களுக்கு கை கொடுக்கும். இட்லி பொடியும் இருக்கும் ஆனா உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பூண்டை இந்த மாதிரி பொடியா அரைச்சு வெச்சுக்கிட்டா உடம்புக்கு ஆரோக்கியமான பொடி போட்டு சாப்பிட்ட மாதிரி இருக்கும். இட்லி தோசை கூட மட்டுமில்லாமல் சுடச்சுட சாதத்து மேல பருப்பு பொடி மாதிரி இந்த பூண்டு பொடி போட்டு கொஞ்சமா நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்டா அவ்வளவு ருசியா இருக்கும்.

இது நீங்க நாலு மாசம் வரைக்கும் ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம். அதுக்கு அனைத்து பொருட்களையும் நல்லா வறுக்கணும் அப்பதான் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். இந்த பூண்டு பொடி ஒரு தடவ அரச்சி வச்சிக்கிட்டீங்கன்னா போதும் அதுக்கப்புறம் தீர்ந்து போச்சுன்னா அடிக்கடி செஞ்சுக்கிட்டே இருப்பீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போயிடும்.

மினி இட்லி செஞ்சு எண்ணெயில் பூண்டு பொடி போட்டு இட்லியை சேர்த்து நல்லா கலந்து குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு லஞ்ச் ஆகவும் கொடுத்துவிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப பிடிச்சு போய் அடிக்கடி உங்ககிட்ட இந்த பூண்டு பொடி இட்லி கேட்டுட்டே இருப்பாங்க. இப்ப வாங்க குழந்தைகள் இருந்து எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச சூப்பரான பூண்டு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி இதே முறையில் வீட்டில் அரைச்சு வச்சுக்கோங்க சட்டுனு புளியோதரை செஞ்சிடலாம்!!

Recipes AMP · Quick view
View full