- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
புளியோதரை அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது அதுலயும் கோவில்ல கொடுக்கிற புளியோதரைக்கு நிறைய பேரு அடிமையா இருப்பாங்க. ஒரு சிலர் கோவிலுக்கு போறதே புளியோதரை வாங்கி சாப்பிடுவதற்கு தான் ஆனா எல்லா நேரத்துலயும் நமக்கு புளியோதரை கிடைக்காது அந்த மாதிரி சமயங்களில் புளியோதரை சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்கு வீட்லயே ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி இருந்தா சட்டுனு புளியோதரை செஞ்சு சாப்பிடலாம். அதுக்கு நம்ம வீட்டிலேயே இந்த புளியோதரை பொடிய ரெடி பண்ணி வச்சிக்கிடலாம். தோணும்போதெல்லாம் எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து கடலை பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிச்சு இந்த பொடியை போட்டு மிக்ஸ் பண்ணி சூப்பரான புளியோதரை அதுலையும் கோவில் ஸ்டைல் புளியோதரை செஞ்சு சாப்பிடலாம்.
இந்த புளியோதரைக்கு கொஞ்சம் தேங்காய் துவையல் சைட் டிஷ்ஷா வச்சுக்கிட்டா போதும் ஒரு தட்டு புளியோதரை சாப்பிடலாம் அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்டா இருக்கும். வேலைக்கு போற பெண்கள் எல்லாரும் வீட்ல இந்த இன்ஸ்டன்ட் புளியோதரை கூடிய செஞ்சு வச்சுகிட்டா ஒரு சில சமயங்களில் லஞ்ச் பாக்ஸ்க்கு குழந்தைகளுக்கு இந்த புளியோதரை பொடியை வைத்து புளியோதரை கிண்டி கொடுத்து விடலாம். வேலையும் மிச்சம். இப்ப வாங்க இந்த இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி சுவையா ரெண்டு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கேரளா ஸ்டைல் சாம்பார் செய்ய மணமணக்கும் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் முதலில் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு சேர்த்து தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மல்லி விதைகள் வெந்தயம் மிளகு சீரகம் வெள்ளை எள் அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கருவேப்பிலையும் சேர்த்து லேசாக வறுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு புளியை பிச்சுப்போட்டு நன்றாக வறுத்து எடுத்து அனைத்தையும் ஆற வைத்துக் கொள்ளவும்.
அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வெல்லமும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். இப்பொழுது சுவையான இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி தயார்.
புளியோதரை வேண்டும் என்றால் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை கருவேப்பிலை சேர்த்து தாளித்து இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறி இறக்கினால் சுவையான புளியோதரை தயார்.






