தென்னிந்திய உணவில் சாம்பார் உணவு மிகவும் முக்கியமானது. கல்யாணம் தொடங்கி விசேஷ நாட்கள், சாதாரண நாட்கள் என எல்லா நேரங்களிலும் பரிமாறப்படும் சாம்பார் பல வகைகளில் விதவிதமாக சமைக்கப்படுகிறது. பெரும்பாலான நபர்களுக்கு சாம்பார் என்றாலே மிகவும் பிடிக்கும். சாம்பார் உணவை மூன்று வேலை கொடுத்தாலும் சளிக்கலாமல் சாப்பிடும் நபர்கள் இருக்கின்றனர். அதோடு சாம்பார் வைப்பது கஷ்டமான வேலையாக இருக்காது. சமையலில் ஈசியாக செய்ய கூடிய உணவுகளில் ஒன்று தான் சாம்பார்.
நாம் சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு மசாலாப் பொடியையும் தனித்தனியாக சேர்த்து சாம்பார் வைப்போம். ஆனால் இவ்வாறு செய்யும் போது மசாலா பொடிகளின் அளவை சரியான அளவில் சேர்க்காவிட்டால் சாம்பார் சுவையாக வராது. இதற்கு தீர்வாக ஒரே மசாலாவாக, ஒரு சாம்பார் பொடியை தயார் செய்து வைத்து வைத்துவிட்டால், சாம்பார் வைக்கும் போது எளிதாக இந்த மசாலாவை சேர்த்து சுவையான சாம்பார் வைக்கலாம். அதனுடைய வாசம் சூப்பராக வரும். சுவையும் அருமையாக இருக்கும். கடையில் காசு கொடுத்து வாங்குவதை விட வீட்டிலே தயாரித்து வைத்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாருங்கள் இந்த எளிய, வாசனையுடன் கூடிய, சுவையான கேரளா ஸ்டைல் சாம்பார் பொடியை, வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி | Kerala Style Sambar Powder Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 300 கி தனியா
- 15 வர மிளகாய்
- 3 டீஸ்பூன் கடலை பருப்பு
- 3 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 4 டீஸ்பூன் கடலை பருப்பு
- 2 டீஸ்பூன் கடுகு
- 2 டேபிள் ஸ்பூன் மிளகு
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி
- 2 டீஸ்பூன் வெந்தயம்
- 2 கப் கறிவேப்பில்லை
- 10 குண்டு மஞ்சள்
செய்முறை
- முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில் தனியாவை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு துவரம் பருப்பை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- பின் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, அரிசி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை அனைத்தும் ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் நல்ல மணத்துடன் கூடிய கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான இட்லி பொடி இப்படி செஞ்சு வீட்டுல ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!