பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற கடாய் பன்னீர் எளிமையான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் அதைக் கொண்டு சுவையான கடாய் பன்னீர் செய்யுங

By Prem Kumar · 15/6/2025

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் அதைக் கொண்டு சுவையான கடாய் பன்னீர் செய்யுங்கள். இந்த கடாய் பன்னீர் சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது. அவ்வளவு நல்லது உடம்புக்கு. சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் ரெசிபியை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் கடாய் பன்னீரை முயற்சி செய்து பார்க்கலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். வாருங்கள் சுவையான எளிய முறையில் கடாய் பன்னீர் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full