- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் அதைக் கொண்டு சுவையான கடாய் பன்னீர் செய்யுங்கள். இந்த கடாய் பன்னீர் சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது. அவ்வளவு நல்லது உடம்புக்கு. சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் ரெசிபியை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் கடாய் பன்னீரை முயற்சி செய்து பார்க்கலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். வாருங்கள் சுவையான எளிய முறையில் கடாய் பன்னீர் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சதுரமாக நறுக்கி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.
அதன்பிறகு தண்ணீர் சற்று சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கி வைத்துள்ள வெங்காயம் குடைமிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
பின் வறுத்து வைத்துள்ள பன்னீர் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கடாய் பன்னீர் தயார்.






