ஈரல் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!

இப்ப இருக்கிற காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் உடம்புல அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி வரனும் அப்படினா உங்க கண்டிப்பா ஈரல் சாப்பிட்டே ஆகணும். ஈரல் சுவரொட்டி இதெல்லாம் சாப்பிடும்போது நம்ம உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகமாயிருக்கும்.

By Prem Kumar · 15/11/2024

இப்ப இருக்கிற காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் உடம்புல அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி வரனும் அப்படினா உங்க கண்டிப்பா ஈரல் சாப்பிட்டே ஆகணும். ஈரல் சுவரொட்டி இதெல்லாம் சாப்பிடும்போது நம்ம உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகமாயிருக்கும். ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கிறதால உடம்பு ஆரோக்கியமா இருக்கும். அதனால கண்டிப்பா வாரத்துக்கு ஒரு தடவை ஈரல் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த ஈரல் சாப்பிட பிடிக்காதவங்க இப்போ பாக்க போற இதே மாதிரி ஈரல் பெப்பர் ப்ரை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா ஈரல் பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த ஈரல் பெப்பர் ஃப்ரை டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி தான் நான் டேஸ்ட் சூப்பரா இருக்கும். வெறும் சாதத்திலையும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் ரசம் சாதத்திற்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். நல்லா சுட சுட சாதத்துல இது போட்டு பிசைஞ்சு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். இந்த பெப்பர் ஃப்ரைக்கு குடும்பமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு ருசியான ரெசிபி தான் இந்த ஈரல் பெப்பர் ஃப்ரை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய ஒன்னு.

குழந்தைகள் வேணும்னு சொன்னா கூட அவங்களுக்கு சாப்பாட்டில் மறைச்சு கூட ஊட்டி விட்டுடுங்க. ஏன்னா ஈரல் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப ரொம்ப அதிகமாகும். இந்த ஈரல் ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே விரும்பி சாப்பிடணும்னா இதே செய்முறைகளில் இதே அளவுல செய்யுங்க. சமைக்க தெரியாது உங்க கூட ஈஸியா இந்த ஈரல் பெப்பர் ப்ரை செஞ்சுடலாம். அவ்ளோ சுலபமா எல்லாராலயும் செய்ய முடிகிற ரெசிபி தான் இது. இப்ப வாங்க இந்த சுவையான ஈரல் பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full