உருளைக்கிழங்கு மிளகு வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

உருளைக்கிழங்கு மிளகு வறுவல் இதுவரைக்கும் நிறைய பேர் செஞ்சிருக்கவே மாட்டீங்க. உருளைக்கிழங்கு சிக்கன் பொடி போட்டு வறுத்து சாப்பிட்டு இருப்பீங்க. உருளைக்கிழங்குல தனிமிளகாய் தூள் போட்டு மசியல் செஞ்சு கூட சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு மிளகு வறுவல் செஞ்சு சாப்பிட்டு இருக்க

By ·

உருளைக்கிழங்கு மிளகு வறுவல் இதுவரைக்கும் நிறைய பேர் செஞ்சிருக்கவே மாட்டீங்க. உருளைக்கிழங்கு சிக்கன் பொடி போட்டு வறுத்து சாப்பிட்டு இருப்பீங்க. உருளைக்கிழங்குல தனிமிளகாய் தூள் போட்டு மசியல் செஞ்சு கூட சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு மிளகு வறுவல் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. இந்த மழைக்காலத்துக்கு சுடச்சுட ரசம் வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செஞ்சு சாப்பிட்டீங்கன்னா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த மிளகு வறுவல தயிர் சாதத்துக்கும் வச்சு சாப்பிட சூப்பரா இருக்கும்.

இது மட்டுமில்லாமல் சாம்பார் சாதம் புளி சாதம் லெமன் சாதம்னு எல்லாத்துக்குமே இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இதுல மிளகுத்தூள் சேர்த்து இருக்கிறதால சளி இருமல் இருக்கிறவங்க இதை சாப்பிட்டீங்கன்னா சளி இருமல் பறந்து போயிடும். நல்லா சுட சுட சாதத்துல சூடான ரசம் பக்கத்துல இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல் வச்சு சாப்பிடுவதற்கு அமிர்தமா இருக்கும். பொதுவா உருளைக்கிழங்கு வருவல் அப்படின்னு சொன்னாலே, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே குஷி ஆயிடுவாங்க.

அந்த வகையில இந்த ருசியான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே செஞ்சு கொடுங்க. சின்ன குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் காரம் கம்மியா சேர்த்துக்கோங்க. பெரியவங்க உங்களுக்கு ஏத்த மாதிரி காரம் சேர்த்து சாப்பிடுங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம உருளைக்கிழங்கு மிளகு வறுவல காலி பண்ணிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. சூப்பரான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.

இதனையும் படியுங்கள் : சூப்பராக காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு தவா வறுவல் ஒரு தரம் இப்படி மட்டும் செய்து பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை