Home சைவம் சூப்பராக காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு தவா வறுவல் ஒரு தரம் இப்படி மட்டும் செய்து பாருங்க!

சூப்பராக காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு தவா வறுவல் ஒரு தரம் இப்படி மட்டும் செய்து பாருங்க!

உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருள். இதில் அதிக அளவு சத்துக்கள் இருக்கு இந்த உருளைகிழங்கு ரொம்பவே அதிக அளவு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடிய ஒரு கிழங்கு வகை. இந்த உருளைகிழங்கு ரொம்பவே ருசியா எப்பவும் புளிக்குழம்பு, சாம்பார், வறுவல், மசியல் இந்த மாதிரி நிறைய செய்து சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

வித்தியாசமான தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும். எப்போதும் இருக்கிற உருளைகிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும் இந்த தவா வறுவல். எப்பவுமே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியான வறுவல் சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருக்கா அப்போ உருளைகிழங்கு இந்த மாதிரி தவா வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க.

இது உங்க எல்லாருக்குமே பிடிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இப்போது நம்ம உருளைக்கிழங்கு செய்து சாப்பிட போறோம். இந்த ருசியான  உருளைகிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
3 from 5 votes

உருளைக்கிழங்கு தவா வறுவல் | Potato Tawa Fry In Tamil

வித்தியாசமான தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும்.எப்போதும் இருக்கிற உருளைகிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும்இந்த தவா வறுவல். எப்பவுமே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியானவறுவல் சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருக்கா அப்போ உருளைகிழங்கு இந்த மாதிரி தவா வறுவல்செய்து சாப்பிட்டு பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Potato Tawa fry
Yield: 5
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைகிழங்கு
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் உருளைகிழங்கை தோல் சீவி விட்டு  கழுவி சதுரமாக  நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து உருளைகிழங்கு,  மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து முக்கால் பதம்வேக வைக்கவும். உருளைகிழங்கு முக்கால் பதம் வெந்த பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் உருளை கிழங்கில் சோளமாவு, சிறிது  உப்பு சேர்த்துகலந்து வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  •  பிறகு அதில் சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலைசேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதை நன்றாக வதங்கிய பிறகு அதை அடுப்பை நிறுத்திவிட்டுஅந்த சூட்டில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  •  வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில்சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பிறகு  வேக வைத்து எடுத்துள்ள  உருளைகிழங்கில் மிளகாய்தூள், தேங்காய் மசாலாவை சேர்த்து முழுவதும் படுமாறு தடவி விடவும்.
  • பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய உருளைகிழங்கை இரண்டு புறமும் திருப்பி போட்டு வேகவைத்து  பரிமாறினால் சுவையான உருளைகிழங்கு தவாவறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 36g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg