Advertisement
சைவம்

இரவு டிபனுக்கு சுட சுட மிருதுடான சிறுக்கீரை சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ சற்று வித்தியாசமாக மற்றும் சுவையான கீரை சப்பாத்தி செய்து பாருங்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் ஒரு இரவு உணவாக சப்பாத்தி உள்ளது. சுவை மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் சப்பாத்தி எடையைக் குறைக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. பெரும்பாலும் இரவு உணவுக்கு எல்லோரின் விருப்பம் சப்பாத்தியாக இருக்கிறது. ஆனால் சப்பாத்தி சூட இருக்கும்போது மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். ஆறிவிட்டால் ரப்பர் போன்றதாகிவிடுகிறது. இதனாலேயே பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி சாப்பிட ஆசையிருந்தும் தவிர்த்து விடுகின்றனர். சப்பாத்தியை தினசரி உணவில் ஒருவேளையாவது சேர்த்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவதிலிருந்தே கோதுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

Advertisement

பெரும்பாலும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின் தேர்வு சப்பாத்தியாக தான் இருக்கும். எப்போதும் கோதுமை மாவால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுவதற்கு பதிலாக, அதில் கொஞ்சம் மாற்றங்களை செய்து கொண்டால் போர் அடிக்காமல் சப்பாத்தியை விரும்பி சாப்பிடலாம். மேலும் நாம் சேர்க்கக்கூடிய பொருட்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் எடையை குறைப்பது இன்னும் சுலபமாகும். இன்றைய பதிவில் எடை இழப்புக்கு உதவக்கூடிய கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சப்பாத்தியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சிறுகீரை சப்பாத்தி | Siru keerai chapati recipe in tamil

Print Recipe
தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ சற்று வித்தியாசமாக மற்றும் சுவையான கீரை சப்பாத்தி செய்து பாருங்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் ஒரு இரவு உணவாக சப்பாத்தி உள்ளது. சுவை மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் சப்பாத்தி
Advertisement
எடையைக் குறைக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. இன்றைய பதிவில் எடை இழப்புக்கு உதவக்கூடிய கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சப்பாத்தியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword keerai chapati
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 339

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கட்டு சிறுகீரை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் ஓமம்
  • 300 கி கோதுமை மாவு
  • 1 துண்டு இஞ்சி                          
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் சிறுகீரையை அலசி வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸியில் சுத்தம் செய்த சிறுகீரையை சேர்த்து அதனுடன் சீரகம், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவை ஒரு பவுளில் சேர்ந்து அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் ஓமம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 10 நிமிடங்கள்‌ அப்படியே வைத்து விடவும். சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான சிறுகீரை சப்பாத்தி தயார்.

Nutrition

Serving: 400 g | Calories: 339kcal | Carbohydrates: 32g | Protein: 13.7g | Fat: 1.9g | Saturated Fat: 0.3g | Potassium: 405mg | Fiber: 12.2g | Iron: 3.9mg

இதையும் படியுங்கள் : இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு பாம்பே சட்னி இப்படி செய்து பாருங்கள்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

5 நிமிடங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

47 நிமிடங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

5 மணி நேரங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

13 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

17 மணி நேரங்கள் ago