Home சட்னி இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு பாம்பே சட்னி இப்படி செய்து...

இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு பாம்பே சட்னி இப்படி செய்து பாருங்கள்!!!

வீட்டில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி இவற்றை தான் பலரும் சமைக்கின்றனர். ஆனால் அவசரத்திற்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டும் என்றால் தேங்காயைத் துருவி, அரைத்து சட்னி செய்வது என்பது சற்று நேரம் அதிகமாக செலவாகும் விஷயமாகும். அதற்கு பதிலாக இந்த சட்னியை சட்டென நொடிப் பொழுதில் செய்து முடிக்க முடியும். இந்த பாம்பே சட்னியுடன் இட்லி, தோசை செய்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தச் சட்னியை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

சமைக்கத் தெரியாதவங்க, புதுசா சமைக்க பழகுறவங்க, கூட  செய்யக்கூடிய சுலபமான ஒரு சைட் டிஷ் தான் இந்த பாம்பே சட்னி. இதை சில பேர் பாம்பே கடல் என்றும் சொல்லுவார்கள். இந்த முறையில் வித்தியாசமாக சுவையில் இருக்கும். இட்லி, தோசைக்கு பூரி சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
2.17 from 6 votes

பாம்பே சட்னி | Bombay Chutney Recipe In Tamil

வீட்டில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ளதேங்காய் சட்னி, வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி இவற்றை தான் பலரும் சமைக்கின்றனர்.ஆனால் அவசரத்திற்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டும் என்றால்தேங்காயைத் துருவி, அரைத்து சட்னி செய்வது என்பது சற்று நேரம் அதிகமாக செலவாகும் விஷயமாகும்.அதற்கு பதிலாக இந்த சட்னியை சட்டென நொடிப் பொழுதில் செய்து முடிக்க முடியும். இந்தபாம்பே சட்னியுடன் இட்லி, தோசை செய்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்தச் சட்னியை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும்சுவையாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: chutney
Cuisine: tamilnadu
Keyword: Bombay Chutney
Yield: 4
Calories: 693kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம்
  • பொட்டுக்கடலை
  • காய்ந்த மிளகாய்
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை

  • சின்ன வெங்காயத்தை தோலுரித்து, இரண்டாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்துடன் காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த வெங்காயக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றி கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து திக்கானதும் இறக்கவும்.
  • இட்லி,தோசைக்கு பொருத்தமான பாம்பே சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 693kcal | Carbohydrates: 24g | Sodium: 646mg | Potassium: 646mg | Calcium: 43mg