மதிய உணவுக்கு சிறுகீரையுடன், பருப்பு சேர்த்து இப்படி ருசியான சிறுகீரை தக்காளி கடையல் இப்படி செய்து பாருங்க!
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை.
அவ்வாறு கீரையை ஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடையல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே சிறுகீரையுடன் பருப்பு சேர்த்து இப்படி கடையல் செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து பாருங்கள், தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். சிறுகீரையில் சத்து பல நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. வாருங்கள் இந்த சுவையான சிறுகீரை, தக்காளி கடையல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.