மதிய உணவுக்கு சிறுகீரையுடன், பருப்பு சேர்த்து இப்படி ருசியான சிறுகீரை தக்காளி கடையல் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை.

-விளம்பரம்-

அவ்வாறு கீரையை ஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடையல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே சிறுகீரையுடன் பருப்பு சேர்த்து இப்படி கடையல் செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து பாருங்கள், தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.  சிறுகீரையில் சத்து பல நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. வாருங்கள் இந்த சுவையான சிறுகீரை, தக்காளி கடையல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

சிறுகீரை தக்காளி கடையல் | Sirukeerai Kadaiyal

உடம்புக்குஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை. அவ்வாறு கீரையைஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடையல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே சிறுகீரையுடன்பருப்பு சேர்த்து இப்படி கடையல் செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிடகொடுத்து பாருங்கள், தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.  சிறுகீரையில் சத்து பல நிறைந்துள்ளனஇவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரானஇயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. வாருங்கள் இந்த சுவையானசிறுகீரை, தக்காளி கடையல்எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Sirukeerai Kadaiyal
Yield: 4
Calories: 20kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு சிறு கீரை
  • 1 தக்காளி
  • 1 கப் துவரம்பருப்பு
  • 2 பூண்டு பல்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,பூண்டு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  • பின் சேர்த்து தாளிக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிறகு கீரையையும் சேர்த்து வதக்கவும்.
  • வெந்த பின், வெந்த துவரம் பருப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
  • பின் சிறிது நேரம் கொதி வந்தவுடன் இறக்கவும். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்

Nutrition

Serving: 500g | Calories: 20kcal | Carbohydrates: 3g | Sodium: 240mg | Potassium: 65mg | Fiber: 2g | Calcium: 113mg | Iron: 22mg