சின்ன வெங்காய புதினா ரசம் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க. இந்த ரசம் மட்டும் போதும் ஒரு தட்டு சோறும் நிமிஷத்தல காலியாகிடும்!
ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற
ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்.
சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள்.
ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம். ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். புதினா ரசம் என்பது குளிர் அல்லது மழை நாளில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மசாலாப் பொருட்களுடன் கூடிய புளி சார்ந்த தென்னிந்திய பாணி குழம்பு ஆகும். வெறும் சாதத்துடன் புதினா ரசம் மிகவும் நன்றாக இருக்கும், மேலும் செய்வது மிகவும் எளிது. வீட்டு சமையல் அறையில் இல்லாத மருத்துவம், வேறு எங்கும் இல்லை. சின்ன வெங்காயம் மற்றும் புதினா வைத்து எளிமையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான ரசம் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.