ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்.
சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள்.
ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம். ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். புதினா ரசம் என்பது குளிர் அல்லது மழை நாளில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மசாலாப் பொருட்களுடன் கூடிய புளி சார்ந்த தென்னிந்திய பாணி குழம்பு ஆகும். வெறும் சாதத்துடன் புதினா ரசம் மிகவும் நன்றாக இருக்கும், மேலும் செய்வது மிகவும் எளிது. வீட்டு சமையல் அறையில் இல்லாத மருத்துவம், வேறு எங்கும் இல்லை. சின்ன வெங்காயம் மற்றும் புதினா வைத்து எளிமையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான ரசம் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
சின்ன வெங்காய புதினா ரசம் | Small Onion Pudhina Rasam
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1/2 கப் புதினா
- 2 பச்சை மிளகாய்
- 2 தக்காளி
- 1/4 கப் துவரம் பருப்பு
- புளி நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் ரசப்பொடி
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் நெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை நறுக்கிய
செய்முறை
- முதலில் வதக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் புளியை தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பின் அதனுடன் புதினா இலைகளை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரை வேக விடவும். இதற்குள் துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- பின் குக்கரை திறந்து ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் வேக வைத்த துவரம் பருப்பை கரைத்து அதில் சேர்க்கவும்.
- ரசம் நுரை கட்டி பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.ஒரு கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். அதன் மேல் சிறிது கொத்தமல்லி தழை மற்றும் புதினா தூவி இறக்கவும்.
- சுவையான,ஆரோக்கியமான சின்ன வெங்காய புதினா ரசம் தயார்.