சுட சோறுடன் சாப்பிட ருசியான புடலங்காய் முட்டை பொரியல் இப்படி செய்தால் சட்டி சோறும் பத்தாது!

தமிழகத்தில் பாரம்பரியமான பொரியல் கூட்டு வகைகளில் ஒன்றுதான் இந்த புடலங்காய் கூட்டு. வீட்டில் நடக்கக்கூடிய விருந்துகளில் பெரும்பாலும், ஹோட்டல் உணவு சைடிஷ்களில் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் சத்து அதிகமாக இருக்கும

By Prem Kumar · 23/11/2023

தமிழகத்தில் பாரம்பரியமான பொரியல் கூட்டு வகைகளில் ஒன்றுதான் இந்த புடலங்காய் கூட்டு. வீட்டில் நடக்கக்கூடிய விருந்துகளில் பெரும்பாலும், ஹோட்டல் உணவு சைடிஷ்களில் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் சத்து அதிகமாக இருக்கும் காரணத்தால் புடலங்காய் நமது உடலிற்கு மிகவும் நல்லது. புடலங்காய் கூட்டானது கார குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற அனைத்து குழம்பிற்கும் ஏற்ற சைடிஷ்.

பொதுவாக நாம் புடலங்காயை தனியாக பல விதமாக செய்து சுவைத்திருப்போம். அதே போன்று முட்டையையும் பல விதமாக செய்து சுவைத்திருப்போம். முட்டை மற்றும் புடலங்காய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. அந்த இரண்டையும் கொண்டு ஒரு உணவாக செய்தால் அது எப்படியிருக்கும்? அதைத்தான் நாம் இன்று இங்கு காண இருக்கிறோம். ஒரு சிலருக்கு காய்கறிகள் என்றாலே சாதம் தொண்டையில் இறங்காது. அளவிற்கு அசைவ பிரியர்களாக இருப்பார்கள்.

காய்கறி பொரியலை தவிர சிக்கன், மட்டன், மீன், இறால் என செய்து கொடுத்தால் எப்போதும் சாப்பிடும் சாப்பாட்டை விட இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட சாப்பிடுவார்கள். இவ்வாறு காய்கறிகள் பிடிக்காதவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற சுவையில் சிறிது அசைவம் சேர்த்து செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு சில காய்கறிகளுடன் முட்டை, இறால் போன்றவற்றை சேர்த்து செய்யும் பொழுது மிகவும் அற்புத சுவையில் இருக்கும். அவ்வாறு புடலங்காயுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்யும் பொழுது புடலங்காயை பிடிக்காதவர்கள் கூட மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

Recipes AMP · Quick view
View full