தமிழகத்தில் பாரம்பரியமான பொரியல் கூட்டு வகைகளில் ஒன்றுதான் இந்த புடலங்காய் கூட்டு. வீட்டில் நடக்கக்கூடிய விருந்துகளில் பெரும்பாலும், ஹோட்டல் உணவு சைடிஷ்களில் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் சத்து அதிகமாக இருக்கும் காரணத்தால் புடலங்காய் நமது உடலிற்கு மிகவும் நல்லது. புடலங்காய் கூட்டானது கார குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற அனைத்து குழம்பிற்கும் ஏற்ற சைடிஷ்.
பொதுவாக நாம் புடலங்காயை தனியாக பல விதமாக செய்து சுவைத்திருப்போம். அதே போன்று முட்டையையும் பல விதமாக செய்து சுவைத்திருப்போம். முட்டை மற்றும் புடலங்காய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. அந்த இரண்டையும் கொண்டு ஒரு உணவாக செய்தால் அது எப்படியிருக்கும்? அதைத்தான் நாம் இன்று இங்கு காண இருக்கிறோம். ஒரு சிலருக்கு காய்கறிகள் என்றாலே சாதம் தொண்டையில் இறங்காது. அளவிற்கு அசைவ பிரியர்களாக இருப்பார்கள்.
காய்கறி பொரியலை தவிர சிக்கன், மட்டன், மீன், இறால் என செய்து கொடுத்தால் எப்போதும் சாப்பிடும் சாப்பாட்டை விட இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட சாப்பிடுவார்கள். இவ்வாறு காய்கறிகள் பிடிக்காதவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற சுவையில் சிறிது அசைவம் சேர்த்து செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு சில காய்கறிகளுடன் முட்டை, இறால் போன்றவற்றை சேர்த்து செய்யும் பொழுது மிகவும் அற்புத சுவையில் இருக்கும். அவ்வாறு புடலங்காயுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்யும் பொழுது புடலங்காயை பிடிக்காதவர்கள் கூட மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
புடலங்காய் முட்டை பொரியல் | snake gourd egg poriyal recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கி புடலங்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 2 முட்டை
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 3 பச்சை மிளகாய்
- 3 சின்ன வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் புடலங்காயை தோல் சீவி கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, ஜீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய புடலங்காயை சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- புடலங்காய் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து, முட்டையையும் இதனுடன் உடைத்து ஊற்றி நன்றாக வதக்கவும்.
- தண்ணீர் வற்றி முட்டை உதிரி உதிரியாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான புடலங்காய் முட்டை பொரியல் தயார்.