புடலங்காய் மோர் குழம்பு 20 நிமிடத்தில் மணக்க மணக்க இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை நாவிலேயே இருக்கும்!!!
மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்கா
மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்காயையோ, அல்லது வெண்டைக்காயையோ சேர்த்தும், மற்றும் சில பகுதிகளில் மிளகை சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள்.
அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது புடலங்காய் சேர்த்து செய்யப்படும் மோர் குழம்பு. புடலங்காயில் கூட்டு வைப்பது போல் மோர் குழம்பும் வைக்கலாம். காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் வாசனை தான் இந்த குழம்போட ஹைலைட். அதுவும் தாளிக்க தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணா, கேட்கவே வேண்டாம். குழம்பு அப்படியே கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியே இருக்கும்.
இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது. மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் புடலங்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!