சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட ருசியான பருப்பு சேர்த்த புடலங்காய் குழம்பு   இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

புடலங்காய் பொரியல், புடலங்காய் பருப்பு சேர்த்து கூட்டு தானே நாம் சமைத்து இருக்கின்றோம். ஆனால் புடலங்காயில் ஒரு சூப்பரான வாசம் நிறைந்த குழம்பு வைக்கலாம்.  புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்…!பசியைத் தூண்டும். * குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். வித்தியாசமான கம கம வாசத்தோடு இந்த குழம்பை எப்படி வைக்கப் போகின்றோம் என்பதை பற்றிய குறிப்பு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்  சுட சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

கல்யாண வீடுகளில், ஹோட்டல்களில் கொடுக்கும் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ருசியான புடலங்காய் குழம்பு இப்படி ஒருமுறை செய்து பாருங்க. காரக்குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற எல்லா குழம்பு வகைகளுக்கும் மேலாக சூப்பரான ருசியில் இருக்கும் இந்த புடலங்காய் குழம்பு எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

- Advertisement -
Print
4 from 1 vote

புடலங்காய் குழம்பு | Snake guard kulambu Recipe In Tamil

புடலங்காயில் ஒரு சூப்பரான வாசம் நிறைந்த குழம்புவைக்கலாம்.  புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால்கிடைக்கும் பயன்கள்…!பசியைத் தூண்டும். * குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண்உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். வித்தியாசமானகம கம வாசத்தோடு இந்த குழம்பை எப்படி வைக்கப் போகின்றோம் என்பதை பற்றிய குறிப்பு இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்  சுட சுட சாதத்தில்இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாகஇருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: snake gourd Kulambu
Yield: 4
Calories: 12kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் புடலங்காய்
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க :

  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1 ஸ்பூன் மிளகு, சீரகம்
  • 1 டீஸ்பூன் அரிசி
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  •  கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • துவரம் பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், அரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். வறுத்ததை தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் வேக வைத்த பருப்பு, காய் கலவை, அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும். புடலங்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 12kcal | Carbohydrates: 56g | Protein: 12g | Fat: 1g | Potassium: 89mg | Calcium: 24mg

இதையும் படியுங்கள் : சுறா புட்டு போலவே அதே சுவையில் புடலங்காய் புட்டு இப்படி செஞ்சி பாருங்கள்! இதன் ருசியே தனி தான்!