அக்டோபர் 2ம் தேதி நடக்கவிருக்கும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருங்க!
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு அசுப தாக்கங்கள் ஏற்படும். யார் ஆபத்தையும், தேவையற்ற செலவுகளையும் சந்திக்க உள்ளனர் என தெரிந்து கொள்வோம். மேலும் இந்த நாளில் சூரியன், புதன், ராகு, கேது ஆகியோர் அசுப நிலையில் இருப்ப
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு அசுப தாக்கங்கள் ஏற்படும். யார் ஆபத்தையும், தேவையற்ற செலவுகளையும் சந்திக்க உள்ளனர் என தெரிந்து கொள்வோம். மேலும் இந்த நாளில் சூரியன், புதன், ராகு, கேது ஆகியோர் அசுப நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய கிரகணத்தின்போது சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் கன்னி ராசியில் இணைந்திருக்கும். மேலும் ராகுவின் அசுப அம்சம் இந்த மூன்று கிரகங்களிலும் உள்ளது மற்றும் சனியுடன் சூரியனின் ஷடாஷ்டக யோகமும் உள்ளது. இந்த நிலைகள் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமற்றவை. இந்த சூரிய கிரகணம் 5 ராசியினரின் வாழ்க்கையில் தோஷத்தை ஏற்படவுள்ளது. அது யார் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு சூரிய கிரகணம் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த ராசியினரின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணம், முதலீடு விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. முதலீடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசியினரின் ஆரோக்கியத்தில் சூரிய கிரகணம் மோசமான விளைவை ஏற்படுத்தும். திடீரென்று சில நோய்கள் வருவதால் அதிக செலவுகள் ஏற்படும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். விரய ஸ்தானத்தில் நடக்கும் கிரகணத்தால் தேவையற்ற வீண் செலவுகள் செய்ய வாய்ப்புள்ளது என்பதால் பணத்தை கவனமாக கையாளவும். குடும்பத்தினரின் உடல்நிலை பாதிக்கப்படுவதால், மருத்துவ செலவு அதிகமாகும்.
விருச்சிகம்
சூரிய கிரகணத்தால் விருச்சிக ராசியினருக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படும். பண இழப்பு அல்லது பண வரவில் தடங்கல் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலையை முடிப்பதில் பிறரின் தொந்தரவு ஏற்படலாம். உங்களின் வேலை, திட்டங்களை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம். பணத்திற்கு மீறிய செலவு இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கடகம்
சூரிய கிரகணம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். தினசரி பணிகளை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் இருமுறை யோசித்துச் செயல்படவும். பெரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். முக்கிய முதலீடுகள் எதையும் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
மீனம்
சூரிய கிரகணத்தால் மீனம் ராசியினர் எதிர்மறையான விளைவுகளை சந்திப்பார்கள். வாழ்வில் அதிக அளவிலான சவால்கள் ஏற்படும். சரியான முடிவுகளை எடுப்பது கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது. நோய் பாதிப்பு ஏற்படும். பாதகமான சூழலை கவனமாக கடக்கவும். தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத முடிவுகள் ஏமாற்றத்தை கொடுக்கலாம்.
இதனையும் படியுங்கள் : சந்திரகிரகணத்துக்கு பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் ஆறு ராசிக்காரர்கள் இவர்கள் தான்!