மகாலட்சுமியை வசியம் செய்ய மற்றும் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க இந்த பரிகாரத்தை மட்டும் வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள்!!

ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு நாம்

By Prem Kumar · 6/7/2025

ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உப்பை வைத்து எளிய பரிகாரத்தை செய்தாலே போதும். உப்பை வைத்து நம்பிக்கையுடன் செய்யக்கூடிய பரிகாரங்கள் எதுவுமே நிச்சயமாக தோற்காது‌. காரணம் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் இருந்தாலும் கடன் சுமை இருந்தாலும் அல்லது மற்ற ஏதாவது சுபகாரியத் தடை இருந்தாலும் சரி பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

கல் உப்பு

உப்பு என்பது மகாலட்சுமி தேவியின் அம்சமாகும். அதுமட்டுமின்றி, விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் இடம் கடல். இங்கிருந்து தான் உப்பு எடுக்கப்படுகிறது. இந்துக்களின் மிக முக்கியமான மங்கல பொருள் உப்பு. அதிலும் கல் உப்பினை ஆன்மிக வழிபாடுகள், பரிகாரங்கள் பலவும் செய்வதற்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. நாம் அனைவரும் கல் உப்பை சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் கல் உப்பு ஆன்மீகத்திலும் மிகப் பெரிய சக்தி கொண்டது. இப்படியான கல் உப்பை வைத்து கேட்ட வரங்களை தரும் கல் உப்பு பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்ய சின்ன மண் பானை, 6 வெற்றிலை, மஞ்சள் நூல், கல் உப்பு, ஏழு முக ருத்ராட்சம், ஒரு எலுமிச்சை, ஆறு அகல் விளக்கு மற்றும் ஒன்பது அகல் விளக்கு ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும் அதனால் வியாழக்கிழமையே உங்கள் பூஜையறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை காலையில் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன் ஒரு தட்டு வைத்து அதில் மஞ்சள் அரிசியை பரப்பி, அதன்மேல் மண் பானையை வைத்து, அதன் வாயில் மஞ்சள் தூள் கட்டி அதன்மேல் மல்லிகை பூவை கட்டி கொள்ளுங்கள். பின் கல்லுப்பை மண் பானையில் போட வேண்டும். கல்லுப்பை மண் பானையில் போடும் போது ” ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் மகாலட்சுமியே நமோஸ்துதே”” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின் கல் உப்பின்னுள் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் எலுமிச்சம் பழத்தை வைய்யுங்கள். பின் அதன்மேல் ருத்திராட்சத்தை வைக்க வேண்டும்.

பின் நாம் வைத்த மண் பானையை சுற்றி ஒன்பது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். நாம் எடுத்து வைத்துள்ள 6 வெற்றிலையை காம்பு சாமியை பார்த்த மாதிரி வைக்க வேண்டும். பின் அந்த வெற்றிலை மீது ஆறு அகல் விளக்குகள் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த விளக்கை ஏற்றும் போது நம்முடைய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை வேண்டிய படியே ஏற்ற வேண்டும். இந்த பரிகாரம் செய்த மறுநாள் (சனிக்கிழமை) நாம் வைத்த எலுமிச்சை பழத்தை நான்காக அறுத்து அதன்மேல் கற்பூரம் வைத்து திரிஷ்டி சுற்றி போட வேண்டும். இந்த வேண்டுதலை தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். உப்பை மாற்ற வேண்டாம், வெற்றிலையை மட்டும் மாற்றினால் போதுமானது. நான்காம் வாரம் வியாழக்கிழமையில் கல் உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். மறுபடியும் வெள்ளிக்கிழமை அன்று புது கல் உப்பை நிறைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை முழு மனதோடு தொடர்ந்து செய்து பாருங்கள் நிச்சயமாக மகாலட்சுமியின் அருளால் மாற்றம் நிகழ ஆரம்பிக்கும்.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து பணப் பிரச்சினைகள் தீர வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை!!

Recipes AMP · Quick view
View full