திருமகள், மலர்மகள், அலைமகள் என பல பெயர்களால் போற்றப்படும் மகாலட்சுமியே செல்வ வளங்கள் அனைத்திற்கும் அதிபதியாக திகழ்கிறாள். மகாவிஷ்ணுவின் துணைவியான இவள், முப்பெரும் தேவிகளில் ஒருவராகவும் உள்ளாள். அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து எண்ணற்ற பல பொருட்கள் வெளிப்பட்டன. அவைகளும் ஒன்றாக தோன்றியவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியின் அருளை வேண்டாம் என சொல்பவர்கள் இருக்க முடியாது. மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காதா, துன்பம் இல்லாத வாழ்க்கை அமையாதா என ஏங்காதாவர்கள் இருக்க முடியாது. அந்த வகையில், பொருளாதார பிரச்னைகள் தீர, செல்வம் பெருக வெள்ளிக்கிழமைகளில் எந்த விஷயங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். இந்த மலர்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் எப்படிப்பட்ட வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு படிப்படியாக உயரும்.
சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசையில் உள்ளவர்களையும் குபேரனாக்கும் சக்தி படைத்தது. சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன். அதனால் சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள். அதுமட்டுமல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் அரிசு, மாவு, பால், தயிர் போன்றவற்றையும் தானம் செய்யலாம்.
மஞ்சள் கேசரி, தேங்காய், அரிசி சாதம், பால் போன்றவற்றை நாம் வெள்ளிக்கிழமைகளில் நைவேத்தியமாக வைத்து வழிபடும் போது குடும்பத்திலும் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். குறிப்பாக நம்முடைய பொருளாதார பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.
மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு விரதம் கடைபிடிப்பது சிறப்பானதாகும். தொடர்ந்து 16 வாரங்கள் மகாலட்சுமி தாயாருக்கு விரதம் இருப்பதனால் வெற்றிகளும், பண வரவும், செல்வமும், அதிர்ஷ்டமும் எப்போதும் வாழ்வில் நிறைந்திருக்கும்.
தாமரையில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். தாமரை விதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாலை தாமரை விதை மாலை. இந்த மாலையைக் கொண்டு மகாலட்சுமி தாயாரை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் தடைகள் விலகும்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமிக்கு உங்களை பிடிப்பதற்கும், உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்குவதற்கும் இதை மட்டும் பண்ணுங்க!




