திருமகள், மலர்மகள், அலைமகள் என பல பெயர்களால் போற்றப்படும் மகாலட்சுமியே செல்வ வளங்கள் அனைத்திற்கும் அதிபதியாக திகழ்கிறாள். மகாவிஷ்ணுவின் துணைவியான இவள், முப்பெரும் தேவிகளில் ஒருவராகவும் உள்ளாள். அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து எண்ணற்ற பல பொருட்கள் வெளிப்பட்டன. அவைகளும் ஒன்றாக தோன்றியவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியின் அருளை வேண்டாம் என சொல்பவர்கள் இருக்க முடியாது. மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காதா, துன்பம் இல்லாத வாழ்க்கை அமையாதா என ஏங்காதாவர்கள் இருக்க முடியாது. மகாலட்சுமியின் முழு அருளையும் பெறுவதற்கு, அவளுக்கு பிடித்தவளாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மகாலட்சுமி வழிபாடு
மகாலட்சுமி மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள். செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். இந்துக்களின் வழிபாட்டு முறையில் விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்க வேண்டும். அப்படி அஷ்டலட்சுமிகளின் அருளும் ஒருவருக்கு கிடைத்தால் மட்டுமே நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.
மகாலட்சுமியை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்
நாராயணனின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான வடிவங்கள் எடுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். ஆகவே அஷ்டலட்சுமியாக வணங்கப்படுகிறாள். இந்த தாயாரை வணங்குவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வீட்டில் மங்கலத்தையும் மனநிறைவையும் ஏற்படும். சகல விதமான தனங்களும், குறைவில்லாத வசதிகளும் கிடைக்கும். இவை அனைத்துமே கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் முழு அருளும் நமக்கு கிடைக்க வேண்டும். அவளே விரும்பி நம்முடைய வீட்டில் வந்து தங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மகாலட்சுமியின் அருளை பெற செய்ய வேண்டியவை
கோலம்

வாசலில் கோலம் போடுவதால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறுவர். சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க கூடியவர்கள் பெண்கள். அதனால் பெண்கள் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய வேலை வாசலில் கோலமிடுவது தான். கோலம் அழகிற்காக மட்டும் போடுவது அல்ல. கோலமிட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுடனேயே மகாலட்சுமியும் வீட்டிற்குள் வந்து விடுவாள்.
பூஜையறை விளக்கு
வீட்டில் சந்தோஷம், நோய் இல்லாத வாழ்க்கை, சாப்பாடு, பணம் எதுவாக இருந்தாலும் அதில் லட்சுமி உறைந்து இருப்பாள். ஆகவே, விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக நேர்மறை ஆற்றல்கள் இருக்கும். அதனால் பூஜை அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. பூஜை அறையில் விளக்கேற்றி, ஊதுபத்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு வந்து விட்டால் போதும். அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வந்து விடுவாள்.
சமயலறை சுத்தம்
ஒரு வீட்டின் சமையறை என்பது அனைத்து அறைகளை காட்டிலும் சற்று முக்கியத்துவம் நிறைந்தது. பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை. பெண்கள் சமைத்து முடித்தவுடன், இரவு சமையல் அறையில் பாத்திரங்களை தேய்த்து விட்டு, சிங்கை சுத்தம் செய்துவிட்டு அடுப்பை துடைத்து விட வேண்டும். ஏனென்றால் சமயலறையில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பல பொருட்கள் உள்ளன. இப்படி சமயலறை சுத்தமாக இருக்கும் போது அந்த வீட்டிற்கு பெரிய அளவில் பணகஷ்டமும் மனக்கஷ்டமும் வராது. நிச்சயமாக அந்த வீட்டில் மன நிம்மதியான வாழ்க்கை இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டில் குறைவில்லாத அரிசி, தானியங்கள் பெருகிக் கொண்டே இருக்க அருள வேண்டும் என அன்னபூரணியிடம் மகாலட்சுமியே சொல்லுவாளாம்.
சுத்தம்
மத நம்பிக்கைகளின்படி, தூய்மை இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது லட்சுமி தேவியின் அருள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இரவில் வீட்டை துடைப்பம் கொண்டு பெருக்கக் கூடாது. அதனால் கையால் சுத்தம் செய்து, வீட்டில் நல்ல மணம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மனதிற்கு அமைதியும், புத்துணர்ச்சியும் தரும் மணம் இருக்கும் இடங்களில் குடியேற மகாலட்சுமி விரும்புவாள்.
இதனையும் படியுங்கள் : பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி தேவியார் பரிகாரம்!




