கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் இந்த ராசிக்காரர்களின் கனவு நிறைவேறும்!

சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத

By Prem Kumar · 15/8/2024

சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். கன்னி ராசியில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சுக்கிரன் பிரவேசிக்கப் போகிறார். கன்னி ராசியின் அதிபதி புதன், சுக்கிரனின் நண்பர். சுக்கிரன் செல்லவிருக்கும் கன்னி ராசியில் ஏற்கனவே கேது சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். சுக்கிரனுடன் சேர்ந்து மகாயோகத்தை உருவாக்கப் போகிறார். ஆடம்பரத்தின் சின்னமாக கருதப்படும் சுக்கிரன், கன்னி ராசியில் கேதுவுடன் இணைந்ததால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தர போகிறார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

கன்னி ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், சுக்கிரனின் அருளால், வியாபாரம் விரிவடையும். உங்கள் வேலையில், தொழிலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பல வழிகளில் இருந்து வருமானம் வரும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் சுக்கிரன், வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். திருமணம் கைகூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம்

சுக்கிரனின் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்களைப் பெறுபவர்களில் சிம்ம ராசிக்காரர்கள் முதலிடம் பிடிக்கின்றனர். சுக்கிரனின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களும் வசதிகளும் அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் பத்திரமாக பாதுகாப்பது அவசியம்.

கும்பம்

கும்ப ராசியினரின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பல துறைகளில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல நேரம் இது. கணவன் மனைவிக்கு இடையேயான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால், குபேர யோகம் 2025 க்குள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்

Recipes AMP · Quick view
View full