எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்!
சுவைகளில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு வகை சுவைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சுவைகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கசப்பு சுவையை மட்டும் அனைவரும் தவிர்த்து விடுவார்கள். எப்படி மற்ற சுவைகள் உடம்பிற்கு தேவையானதாக இருக்கிறதோ, அதேபோல சிறிதளவு கச
சுவைகளில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு வகை சுவைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சுவைகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கசப்பு சுவையை மட்டும் அனைவரும் தவிர்த்து விடுவார்கள். எப்படி மற்ற சுவைகள் உடம்பிற்கு தேவையானதாக இருக்கிறதோ, அதேபோல சிறிதளவு கசப்பு சுவையும் உடம்பிற்கு சென்றால் தான் நமது உடலில் தேவையில்லாத நச்சுக்கள் அழியும். சர்க்கரையின் அளவும் கட்டுப்படும். எனவே பாகற்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பு மிகுந்த காய்கறிகளையும் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சுண்டைக்காய் வைத்து குழம்பு, பொரியல் போன்றவற்றை செய்ய முடியும், அதில் ஒன்றான இந்த சுண்டைக்காய் பொரியலை செய்வது மிகவும் சுலபம்.
காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுண்டைக்காய் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது.புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.. அசத்தலான சுண்டைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க சுண்டைக்காய் பொரியல் எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.