எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

சுவைகளில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு வகை சுவைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சுவைகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கசப்பு சுவையை மட்டும் அனைவரும் தவிர்த்து விடுவார்கள். எப்படி மற்ற சுவைகள் உடம்பிற்கு தேவையானதாக இருக்கிறதோ, அதேபோல சிறிதளவு கசப்பு சுவையும் உடம்பிற்கு சென்றால் தான் நமது உடலில் தேவையில்லாத நச்சுக்கள் அழியும். சர்க்கரையின் அளவும் கட்டுப்படும். எனவே பாகற்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பு மிகுந்த காய்கறிகளையும் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சுண்டைக்காய் வைத்து குழம்பு, பொரியல் போன்றவற்றை செய்ய முடியும், அதில் ஒன்றான இந்த சுண்டைக்காய் பொரியலை செய்வது மிகவும் சுலபம்.

-விளம்பரம்-

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுண்டைக்காய் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது.புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.. அசத்தலான சுண்டைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க சுண்டைக்காய் பொரியல் எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.

- Advertisement -
Print
2.50 from 2 votes

சுண்டைக்காய் பொரியல் | Sundaikkai Poriyal In Tamil

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு.அதில் சுண்டைக்காய் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடியாரும் சமைப்பது கிடையாது.புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய்சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.. அசத்தலான சுண்டைக்காய்பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க!வாங்க சுண்டைக்காய் பொரியல் எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time17 minutes
Course: poriyal
Cuisine: tamil nadu
Keyword: Sundaikkai Poriyal
Yield: 4
Calories: 124kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ சுண்டக்காய்
  • 10 சிறிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக் கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்

தாளிக்க

  • நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

செய்முறை

  • சுண்டைக்காயின் காம்பை நீக்கி விட்டு சற்று நசுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும், அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருஞ்சீரகத்தூள், சோம்பு தூள் போட்டு கிளறி விடவும், சுண்டைக்காயில் சிறிது நீர் விட்டிருக்கும்.
  • அந்த நீரை வடித்து விட்டு சுண்டைக்காயை மட்டும் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வெந்ததும் கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். இப்போது சுண்டக்காய் பொரியல் தயார்,
  • இப்போது சுண்டக்காய் பொரியல் தயார், இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: சாம்பார், ரச சாதத்துடன் சாப்பிடநன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 250g | Calories: 124kcal | Carbohydrates: 5g | Protein: 8g | Potassium: 134mg | Fiber: 5g | Vitamin A: 4IU | Iron: 3mg